மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவனுக்கு நிதி உதவி

 


    திருவொற்றியூரில் மின்சாரம்தாக்கி இறந்த பள்ளி மாணவன்குடும்பத்திற்கு   அதிமுக சார்பில் நிதி உதவி!*


 சென்னை அடுத்த திருவொற்றியூர் தாங்கல் பீர்பயில்வான் தர்கா அருகே வசித்து வருபவர் அல்தாப்உசேன்.

இவருடைய மகன் நோபல் (17வயது) தனியார் பள்ளியில் படித்து வந்தார் .


கடந்த மாதம் 25 ஆம் தேதி அவர் வீட்டு அருகே தேங்கியிருந்த மழைநீரில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் அகால மரணம் அடைந்தார் . 

இறந்த அந்தமாணவனின் தாய்‌ தந்தைக்கு அதிமுக தகவல் நுட்ப பிரிவு காஞ்சிபுரம் மண்டல தலைவரும் 7வது வட்ட மாமன்ற கவுன்சிலருமான டாக்டர் கே.கார்த்திக் அவருடைய வீட்டிற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்து ரூ.50ஆயிரம் நிதி உதவி வழங்கினார். அப்போது அவருடன் அதிமுக மாவட்ட பகுதிவட்டநிர்வாகிகள் மற்றும் உள்ளூர் முஸ்லிம் பெருமக்கள்உடனிருந்தனர்.


உண்மை செய்திகள்