விருதுநகரில் பெருந்தலைவர் பிறந்தநாள் விழா

 


    *பெருந்தலைவர் காமராசரின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தினத்தந்தி நாளிதழ் வடமலையான் கல்வி குழுமத்தின் சார்பாக விருதுநகரில் பெருந்தலைவர் காமராசரின் பிறந்தநாள் விழா மிக சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது.

இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாநில அளவிலான பேச்சுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் திருவாளர் கறிக்கோல்ராஜ் அவர்கள் முன்னிலை வகிக்க வடமலையான் கல்வி குழுமத்தின் உடைய சிறப்பு விருந்தினர்களும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி மேலாளர்களும் தினத்தந்தியின் மூத்த அதிகாரிகளும் இந்த விழாவில் கலந்துகொண்டு, பட்டிமன்ற நடுவரும் தலைசிறந்த பேச்சாளருமான அவனை மாடசாமி அவர்கள் விழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.



     ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்ற மாணவர்களுக்கிடையிலான பேச்சுப்போட்டி விருதுநகரில் கே.வி சாலா பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் வடசென்னை பி ஏ கே பழனிச்சாமி மேல்நிலைப் பள்ளி மாணவன் செல்வன் நிவின் ராஜா கலந்து கொண்டு மிக சீரும் சிறப்புமாக விழா பேருரை நிகழ்த்தி அனைத்து மக்களுடைய ஆதரவையும் கைதட்டலையும் பெற்றார் என்பது சிறப்புக்குரியது. 

மாநில அளவில் வழங்கப்பட்ட 50,000 30,000 20,000 பரிசுகளில் மேற்படி மாணவனின் பெயர் விடுபட்டு இருப்பினும் மிகச் சிறப்பாக பொதுமக்கள் முன்னிலையில் மேடையில் தலை சிறந்த உரையாற்றிய பி ஏ கே பழனிசாமி மேல்நிலைப்பள்ளி மாணவன் நிவின் ராஜா அவர்களுக்கு அனைத்து பொதுமக்களும் பலத்த கரகோஷத்துடன் அவருக்கு வாழ்த்துக்களை விருதுகளாக படைகளிட்டு மகிழ்ந்தார்கள். இந்த மாணவனை தயார்படுத்தி சீரும் சிறப்புமாக மேடைகளில் முழங்க வைத்த முனைவர் இரா தண்டபாணி அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்தார்கள்.

 


முன்னதாக முனைவர் இராச தண்டபாணி அவர்கள் எழுதி வெளியிட்ட பெருந்தலைவர் ஏழைப்பங்காளன் மரபு வழியில் வரலாற்றுப் புதுக் கவிதை காமராசர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புதுக் கவிதை நூலானது நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் திருவாளர் ஜி. கரிக்கோல்ராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது இந்த நூலாசிரியர் முனைவர் இராச தண்டபாணி பட்டதாரி தமிழக சிறி பி ஏ கே பழனிசாமி மேல்நிலைப்பள்ளி பழைய வண்ணாரப்பேட்டை சென்னை 21 தமிழாசிரியர் அவர்களை அனைத்து சான்றோர்களும் வெகுவாக ப்பாராட்டி மகிழ்ந்தார்கள்.



    இந்த நூலுக்கு நூல் வெளியிட மாண்புமிகு தமிழ்நாட்டுதமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக நிதி நல்கை வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்ட நூல் என்பது பெருமை கூறியது.*


உண்மை செய்திகள்