உரிமை கோரப்படாத வைப்புத் தொகை

 


    *ரூ.67,000 கோடி - உரிமை கோரப்படாத வைப்புத் தொகை*

இந்திய வங்கிகளில் 67,000 கோடி ரூபாய் அளவுக்கு உரிமை கோரப்படாத வைப்புத்தொகை உள்ளதாக, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியுள்ளார்.

அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.19, 239 கோடி ரூபாயும் ஐசிஐசிஐ வங்கியில் ரூ.2,063 கோடி ரூபாயும் பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, பரோடா வங்கி, யூனியன் வங்கிகளில் தலா 5,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உரிமை கோரப்படாத வைப்புத்தொகை உள்ளதாக அவர் கூறியுள்ளார்.


    மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி* 

ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் மாத இறுதியிலும் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி

கடலூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்து நேரலையாக மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்


    பெருங்குடி செயின் பறிப்பு - இளைஞர் கைது

சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில், இன்று காலை தனியாக இருந்த பெண்ணிடம்  இளைஞர் ஒருவர் செயின் பறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது

இந்நிலையில் திருவான்மியூர் ரயில்வே போலீசார் பாபுராம் என்பவரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀

கார் ஏற்றி மாணவன் படுகொலை - மேலும் ஒரு இளைஞர் சரண்

சென்னை திருமங்கலத்தில் காதல் விவகாரத்தில்

கார் ஏற்றி மாணவன் படுகொலை - காரை ஓட்டிய இளைஞர் ஆரோன் திருமங்கலம்

காவல் நிலையத்தில் சரண்

திமுக பிரமுகரின் பேரன் சந்துரு உள்ளிட்ட 3 பேர் கைது

செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு இளைஞர் சரண்

இளைஞர் கொலைக்கு பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர்

சொகுசு கார் வளசரவாக்கம் பகுதியில் சிக்கியது.


உண்மை செய்திகள்