கேரளாவின் இடுக்கி மாவட்ட ஆட்சியராக தமிழகத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரி நியமனம்.
தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான விக்னேஸ்வரி கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் சார் ஆட்சியராகவும், கல்வித்துறையில் இயக்குனராகவும்,சுற்றுலாத்துறையின் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றியவர்.முதல்முறையாக மாவட்ட ஆட்சியராக இடுக்கி மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவரது கணவர் NSK .உமேஷ் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
