முதல்வரை சந்தித்த எர்ணாவூர்

 


    இன்று(30-09-2025) தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சென்னை அறிவாலயத்தில் சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் மற்றும் மாநில பொருளாளர் வழக்கறிஞர் கண்ணன் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.



🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀



       கரூரில் இறந்தவர்கள் கதைகள் ஒவ்வொன்றும் வேதனையை பல மடங்கு கூட்டுகிறது. 

பெருமாள் என்பவருக்கு மூன்று மகள்கள். தாயுடன் சேர்ந்து 3 மகள்களும் விஜயை பார்க்கச் சென்றிருக்கிறார்கள். கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு சகோதரிகள் இறந்திருக்கிறார்கள். 

இன்னொரு நபர் தன் மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் என 3 பேரை தன் கண் எதிரே பறி கொடுத்திருக்கிறார். 

சேலத்தைச் சேர்ந்த ஆனந்த், திருமணமாகி ஓராண்டு தான் ஆகிறது. விஜயை பார்க்க சேலத்திலிருந்து கரூர் சென்றவர் பிணமாகத் தான் திரும்பியிருக்கிறார். 

காது கேளாத, வாய் பேசமுடியாத ஒரு பெண் தன் ஒரே மகனை இழந்திருக்கிறார். 

இன்னொரு நபர் விரைவில் திருமணமாகப்போகும் தன் காதலியுடன் விஜயை பார்க்கச் சென்ற இருவருமே பலியாகினர். 

இன்னொரு இளைஞன் நீண்டநாள் காதலியை திருமணம் செய்ய இரு வீட்டாருடன் போராடி சம்மதம் வாங்கியிருந்திருக்கிறார். நேற்று அவருக்கு நிச்சயதார்த்தம். ஆனால் அவர் உயிருடன் இல்லை. 

சின்னச் சின்ன குழந்தைகளை பறிகொடுத்தவர்களின் கதறல் நெஞ்சைப் பிளக்கிறது.. 

அண்ணாமலை சொன்னது தான்.

நாம் பார்க்க நினைக்கும் நடிகர்களுக்கும், தலைவர்களுக்கும் நாமெல்லாம் லட்சத்தில் ஒருவர். 

ஆனால் நம் பெற்றோர்களுக்கு நாம் ஒருவர் தான். 

குடும்பம் தான் முக்கியம். மற்றவை எல்லாம் அப்புறம் தான்.


உண்மை செய்திகள்