*நெல்லையில் டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி*
கடந்த 2013 - 14 ம் ஆண்டுகளில் நடைபெற்றது போல பழிக்கு பழியான கொலைகள் தற்போதும் திருநெல்வேலி திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடியவர்கள் தனிப் படைகள் மூலம் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவார்கள்
தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு இ.கா.ப திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில், நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சிவகங்கை:
தமிழக காவல் துறை டிஜிபி உத்தரவின்படி விரைந்து செயல்பட்டு 101 ரவுடிகளை கைது செய்து சுறுசுறுப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் காவலர்களை பாராட்டி, டிஜிபி சைலேந்திரபாபு வழங்கிய வெகுமதி தொகை 25,000 ரூபாயை வழங்கினார்.
👮💥கஞ்சா விற்பனை செய்த இருவர் குண்டர் சட்டத்தில் கைது மாவட்ட எஸ்பி ஸ்ரீனிவாசன் நடவடிக்கை*
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி மற்றும் கன்னிவாடி காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்த ரேவதி மற்றும் குருநாதன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரையும் தடுப்புக் காவலில் வைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் பரிந்துரையின்பேரில் கஞ்சா விற்பனை செய்த ரேவதி மற்றும் குருநாதன் ஆகிய இருவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்குமாறு மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவு.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் டிஐஜி, எஸ்பி திடீர் ஆய்வு
👮திண்டுக்கல் மாவட்டத்தில் ரவுடிகளின் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணிந்து ஒடுக்கும் பொருட்டு ஒவ்வொரு உட்கோட்டத்திற்க்கும் சார்பு ஆய்வாளர் தலைமையில் ரவுடி சிறப்பு படை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், ரவுடி சிறப்பு படை மற்றும் தனிப்படையினர் ஆகியோர் கைத்துப்பாக்கியுடன் ரோந்து செல்லுமாறு உத்தரவு.
திண்டுக்கல் எஸ்.பி ஸ்ரீனிவாசன்.
நிருபர் பார்த்திபன்