இன்றைய ராசிபலன் 24/07/2020

 மேஷம்: நட்பு வட்டம் விரியும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.


ரிஷபம்: கலைஞர்களுக்கு சிறிய சாதனை காரணமாக தன்னம்பிக்கை கூடும். வியாபாரத்தில் எதிர்பார்தத நல்ல மாற்றத்தை காண்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். அலுவலகத்தில் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.


மிதுனம்::இன்று இடமாற்றத்துடன்  பதவி உயர்வு சிலருக்கு கிடைக்கலாம். குடும்ப பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே மனகசப்பு நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான  பொருட்களை வாங்க நினைப்பீர்கள். எதிர்பாராத திருப்பங்களால் திடீர் நன்மை உண்டாகும்.  


கடகம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள்இன்று எதிர்ப்புகள்  விலகும். காரிய தடை தாமதம் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு  கல்வியில் இருந்த பிரச்சனைகள் தீரும்.  முடிவு எடுக்க முடியாமல் இழுபறியாக இருந்த விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும். 


சிம்மம் : மதிப்பு வாய்ந்த பெரியோர்களைச் சந்திப்பீர்கள். சமீபத்தில் இருந்த வீண் அலைச்சல் தீரும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாக பழகுங்கள். பிடித்த இசையைக் கேட்பதன் மூலம் மன அமைதியை பெறலாம். அலுவலகத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது.


கன்னி: விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள்.கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உடல் அசதி சோர்வு வந்து விலகும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். உத்தியோகத்தில் மேலதிகாரி யுடன் விவாதம் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


துலாம்: கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும்.இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.  கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் மனதில் ஏதாவது குறை இருக்கும் வெளிக்காட்ட  மாட்டீர்கள். பிள்ளைகளுடன்  அனுசரித்து செல்வது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும்.


விருச்சிகம்: வியாபாரிகளுக்கு ஆர்டர் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பெண்களுக்கு பிடித்தமான செயல்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் சம்பள பாக்கியால் மனஅழுத்தத்துடன் காணப்படுவர். மகளுக்கு எதிர்பார்த்த வரன் அமைவதால் மகிழ்ச்சி கூடும்.


தனுசு: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பெருகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் சிலர் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்க செய்வார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.


மகரம்: இன்று சந்திராஷ்டமம் .  எதிர்பார்த்த பணவரவு இருக்கும். புதிய நபர்களிடம் கவனமாக இருப்பது நன்மை தரும். உறவினர் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நன்கு நடக்கும். பணதட்டுப்பாடு ஏற்பட்டு பின்னர் சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த சங்கடங்கள் சரியாகும்.


கும்பம்: சிறிய அளவில் மனக்கலக்கம் உண்டாகலாம். அலுவலகத்தில் திறமையாக செயல்பட்டாலும் சிலரின் விமர்சனத்திற்கு ஆளாவீர்கள். எதிர்பாலினத்துடன் அதிக நெருக்கம் வேண்டாம். பெண்கள் சொந்த விஷயங்களை அக்கம் பக்கத்தினரிடம் பகிர வேண்டாம்.


மீனம்: வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.


மோகனா  செல்வராஜ்