ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்தியர் காலமானார்


ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்தியர் காலமானார்.


மஹாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படத்தில், காந்தியாக பிரபல ஹாலிவுட் நடிகர் பென் கிங்ஸ்லி நடித்திருந்தார்.


உலகம் முழுவதும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில்,  சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட பிரிவுகளுக்காக 8 ஆஸ்கர் விருதுகளை வென்றது.


இந்நிலையில், இந்த படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய பானு அதையாவுக்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.


வரலாற்றிலேயே முதன்முதலாக ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (15.10.20) காலமானார்.


இதுகுறித்து அவரது மகளான ராதிகா குப்தா அவர்கள் கூறுகையில், " நேற்று அதிகாலை அவர் மரணமடைந்தார்.


8 ஆண்டுகளுக்கு முன்பு, அவருக்கு மூளையில் கட்டி ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது. 3 ஆண்டுகளாக அவரது உடலின் ஒரு பகுதி செயலிழந்ததால் படுக்கையில் இருந்து வந்தார். என்று தெரிவித்துள்ளார்.