“வளர்இளம் பருவம் எதிர்பார்க்கும் சமுதாயம் "ஆலோசனை-2022”

 


   சென்னை: இராயபுரம் சட்டமன்ற தொகுதியின் 50வது வட்டத்தில் உள்ள “ஸ்ரீ பேலஸ்”ல் அருணோதயா மையம் சார்பில் நடைபெற்ற வேலை செய்யும் குழந்தைகளுக்கான “இளம் பருவத்தினர் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சமூகத்தின் பங்கு மற்றும் இளம் பருவ ஆலோசனை-2022” நடைபெற்றது     நிகழ்ச்சியில் இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் இரா.மூர்த்தி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். உடன் துணை ஆணையர் திரு.பவன்ரெட்டி ஐ.பி.எஸ் அவர்களும் கலந்து கொண்டார்.     மேலும் இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைத்து மாணவ,மாணவிகள் மற்றும் குழந்தை பருவத்தினர் அனைவருக்கும் கல்வி பற்றிய ஆலோசனைகளை வழங்கி சிறப்பு உரையாற்றினார்கள்.     மாணவ, மாணவியர்களால் உருவாக்கப்பட்ட “வளர்இளம் பருவம் எதிர்பார்க்கும் சமுதாயம்” என்ற தலைப்பில் கண்காட்சியினை திறந்துவைத்து மாணவர்களின் கலை திறமைகளை பார்வையிட்டனர். உடன் அருணோதயா நிர்வாக இயக்குனர் திரு.விர்ஜில் டி.சாமி, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் உடனிருந்தனர்.


செய்தியாளர் பாஸ்கர்