தமிழகத்தில் கடந்த ஏழு மாதங்களில் உணவு பொருள் கடத்தலில் ஈடுபட்ட 6272 பேர் கைது ஐ.ஜி ரூபேஷ் குமார் மீனா

 


 

       தமிழகத்தில் கடந்த ஏழு மாதங்களில் உணவு பொருள் கடத்தலில் ஈடுபட்ட 6272 பேர் கைது ஐ.ஜி ரூபேஷ் குமார் மீனா தகவல்*

தமிழகத்தில் கடந்த ஏழு மாதங்களில் உணவுப்பொருள்கள் களத்தில் ஈடுபட்ட 6272 பேரை உணவு பொருள் கடத்தல் தரிப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளதாக ஐஜி ரூபேஷ்குமார் மீனா தெரிவித்துள்ளார் 

ஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பயன்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது இந்த பொருட்களை சில முறைகேடாக கடத்தி கள்ள சந்தையில் விற்று லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர் 

குடிமை பொருள் வளங்கள் குற்றப்பிரிவுத்துறை அலுவலர்கள் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு கடத்தல் மற்றும் பதுக்களில் ஈடுபடும் நபர்கள் அதற்கு உறுதுணையாக செயல்படும் நபர்கள் மீதும் கடத்தலுக்கு  பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது இந்த சம்பவங்களில் தொடர் குற்றச்செயலில் ஈடுபடும் அவர்களை தடுப்பு காவலில் வைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது 

அதன்படி ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை 6025 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த வழக்கில் 2342 டன் பொது விநியோகத் திட்ட அரிசி 13720 சமையல் எரிவாயு சிலிண்டர் கைப்பற்றப்பட்டுள்ளது மொத்த ஒரு கோடியே 84 லட்சத்து 41ஆயிரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது 

இந்த குற்றங்களில் ஈடுபட்ட 6272 பேரை கைது செய்துள்ளனர் மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது


உண்மை செய்திகள்