முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்: கறிவிருந்து வைத்த கனிமொழி

 


      முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்: கறிவிருந்து வைத்த கனிமொழி


தூத்துக்குடி: முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, அவரது தங்கையான கனிமொழி, தூத்துக்குடி மக்களுக்கு பிரியாணி விருந்து நடத்தினார். இதில் பலரும் கலந்து கொண்டனர்.

முதல்வர் ஸ்டாலினின் 71வது பிறந்தநாளையொட்டி, திருச்செந்தூரில் நடந்த மாராத்தான் ஓட்டத்தை, கனிமொழி எம்.பி., கொடி அசைத்து துவங்கி வைத்தார். இதில் வெற்றி பெற்றவருக்கு முதல் பரிசாக ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, தூத்துக்குடியில் (மார்ச் 3) மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி அடங்கிய கறி விருந்துக்கு, கனிமொழி ஏற்பாடு செய்திருந்தார். காலையிலேயே துவங்கிய இந்த விருந்தில், கட்சியினர் மட்டுமன்றி பொதுமக்களும் கலந்து கொண்டனர். கனிமொழி, சிலருக்கு தன் கையாலேயே உணவு பறிமாறினார். பின், போலியோ சொட்டு மருந்து முகாம் மற்றும் புதிய பஸ் சேவைகளையும், கனிமொழி துவங்கி வைத்தார்.