ஆந்திராவில் பயங்கர ரயில் விபத்து

 


       ஒரே தண்டவாளத்தில் வந்த 2 ரயில்கள் -  ஆந்திராவில் பயங்கர* *ரயில் விபத்து

ஆந்திர ரயில் விபத்து - 19 பேர் பலி*

ஆந்திர மாநிலம் கண்டகபள்ளி அருகே 2 ரயில்கள் மோதி* *விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழப்பு.*

பிரேக் பழுது காரணமாக நிறுத்தப்பட்டிருந்த விசாகா- ராயகாடா பயணிகள் ரயில் மீது பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது



    ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள கண்டகபள்ளி ரயில் நிலையத்தில் விசாகப்பட்டினம் ராயகட்டா பயணிகள் விபத்துக்களானது. இந்த துயர நிகழ்வில், 19 பேர் மரணமடைந்துள்ளார்.  மேற்பட்ட பயணிகள் படுகாயம்.

குண்டூரில் இருந்து ராயக்கட்ட சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் சிக்னல் கோளாறு காரணமாக கண்டகப்பள்ளி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தது. அப்போது,  அதே நேரத்தில்  விசாகப்பட்டினத்தில் இருந்து பலாசா சென்று கொண்டிருந்த பேசஞ்சர் ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் ராயக்கட்ட எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டது.

விபத்து பற்றி தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் விஜயநகரத்திலிருந்து சம்பவ இடத்திற்கு சென்றனர்.    இருட்டு மற்றும் மின்சார வயர் அறுந்து விழுந்தது ஆகிய காரணங்களால் என்ன நடக்கிறது என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 பலியானவர்கள் குடும்பத்திற்கு ரயில்வே துறையை சார்பில் 10 லட்சம் நிவாரணமும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம்  வழங்கப்படுகிறது.

இந்த ரயில் விபத்தில் சிக்கிக் கொண்டுள்ள தங்களின் உறவினர்களைப் பற்றி தெரிந்துகொள்ள இந்திய ரயில்வே அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளது. BSNL 08912746330, 08912744619 Airtel - 8106053051, 8106053052 BSNL - 8500041670, 8500041671