ராஜீவ் நட்பகம்" சார்பில் 77வது சுதந்திர தினம் கொண்டாட்டம்:

 


    ராஜீவ் நட்பகம்" சார்பில் 77வது சுதந்திர தினம் (15.8.23) கொண்டாட்டம்:


வடசென்னை மாவட்டத்தில் ஆறு இடங்களில் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு, உணவு, வழங்கி கொண்டாடப்பட்டது.


காலை 9.15 மணியளவில் "ராஜீவ் நட்பகம்" தலைமையகத்தில் வடசென்னை மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் கே.வி.எஸ்.தயாளன் அவர்கள் தலைமையில், வடசென்னை மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் ஏ.எஸ்.ஷாஜகான் அவர்கள் வரவேற்புரையில், மாமன்ற முன்னாள் உறுப்பினர் எம் கே பாபு சுந்தரம் அவர்கள் முன்னிலையில், மகளிர் காங்கிரசை சேர்ந்த யசோதா அவர்கள் கொடியேற்றி வைத்தார்கள். காமராஜர் பொதுநல சங்கத் தலைவர் என்.பி.சுந்தரம் அவர்கள் தேசபக்தி பாடல்களை பாடினார்கள். பொதுமக்களுக்கு ஜாங்கிரி, சாக்லேட் வழங்கப்பட்டது.



    இரண்டாவதாக 9.45 மணியளவில் வட்டத் தலைவர் டி.காளிதாஸ் அவர்கள் பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொது செயலாளர் கே.ராமலிங்க ஜோதி அவர்கள் கொடியேற்றினார்கள்.


மூன்றாவதாக காலை 10.15 மணியளவில், வட சென்னை மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.கே. சிவராஜ் அவர்கள் பகுதியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜி.பொன்னுரங்கம்.பிசிசி, அவர்கள் கொடி ஏற்றி வைத்தார்கள்.



    நான்காவதாக காலை 10:30 மணி அளவில் காங்கிரஸ் நட்பக உணர்வாளர் எம்.ஏழுமலை அவர்கள் பகுதியில் வட சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் வே.உமாபதி அவர்கள் கொடி ஏற்றி வைத்தார்கள்.


ஐந்தாவதாக திருவெற்றியூரை சேர்ந்த ராஜன் காந்தி அவர்கள் அப்பகுதியில் கொடி ஏற்றி வைத்தார்கள்.



    ஆறாவதாக, 10.45 மணியளவில் வடசென்னை மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் முனைவர் ஐ.முகமது பாரூக் அவர்கள், தங்கள் பகுதியில் கொடி ஏற்றி வைத்து. பொதுமக்களுக்கு லட்டு, பிரிஞ்சி உணவு, தண்ணீர் பாட்டில், வழங்கினார்கள்.


நிகழ்வுகளில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கே.ராமலிங்க ஜோதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜி பொன்னரங்கம்.பிசிசி, மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் 

ஏ.எஸ்.ஷாஜகான், மாவட்ட வர்த்தகத் துறை தலைவர் வே.உமாபதி, ஆர் கே நகர் 3வது சர்க்கிள் தலைவர் டி.கே.மூர்த்தி, மாமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.பாபு சுந்தரம், வடசென்னை மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் கே.வி.எஸ்.தயாளன், மனித உரிமையை சேர்ந்த பி.வேலா, வடசென்னை மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.கே.சிவராஜ், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஈ.எஸ்.பார்த்தசாரதிDCC, ஏ.சாதிக் பாட்சா, ஏ.சிக்கந்தர், எம்.லியாகத், எல்.நாகூர் கனி, ஏ.காஜாமொய்தீன், யூ.சாகுல் அமீது, பழனி, டி.பிரபாகரன், ரமேஷ், இளையராஜா, வட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.காளிதாஸ், எம்.ஏழுமலை, சீனிவாசன், கவிஞர் கௌதமன், திருவொற்றியூர் சேர்ந்த காங்கிரஸ் செயல் வீரர்கள் ஆர்.எஸ்.கலைமணி, மனோகர், ராஜன் காந்தி, மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா நிறைவில், "நாட்டுப் பற்றுடன் இந்திய தேசத்தை காப்போம்" என்று உறுதி மொழி எடுத்தனர்.