ஒரு வரிச் செய்தி துளிகள்


    😢திண்டுக்கல்  கோபால்பட்டி அருகே  தனியார் பேருந்தில் முன் சீட்டில் அமர்ந்திருந்த பெண்ணை சொத்து பிரச்சனை சம்பந்தமாக கழுத்தறுத்து கொலை சம்பவ இடத்தில் சாணார்பட்டி போலீசார்  விசாரணை.

💗💗💗💗💗💗💗

 🌺சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேரடியாகவும் காணொலி வாயிலாகவும் வழக்கு விசாரணை நடைபெறும்.*

வரும் திங்கள்கிழமை முதல் நேரடியாகவும் காணொலி மூலமும் விசாரணை நடத்தப்படும் என சென்னை ஐகோர்ட் பதிவாளர் தெரிவித்துள்ளார்

💗💗💗💗💗💗💗

🌺சென்னை பாரிமுனை, முத்தியால்பேட்டை, மண்ணடி ஆகிய இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

பாரிமுனை ஈவ்னிங் பஜாரில் முகமது இலியாஸ் என்பவர் கடையில் நடந்த என்.ஐ.ஏ. சோதனையில் ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பிரதமர் மோடி வரும் 8ம் தேதி சென்னை வர உள்ள நிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

💗💗💗💗💗💗💗

🌺தனியார் பள்ளிகளை முறைப்படுத்தும் சட்டத்திற்கெதிரான வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.*

தனியார் பள்ளிகளின் உரிமையில் தலையிடும் வகையில் முறைப்படுத்துதல் சட்டம் உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

💗💗💗💗💗💗💗

🌺மதுரை: ஆண்டுதோறும் முன்னுரிமை அடிப்படையில் நீர் பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு ஐகோர்ட் கிளையில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.


 தென்காசி ஆலங்குளம் அருகே புதிய கால்வாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் மனு தாக்கல் செய்தார்.

💗💗💗💗💗💗💗

🌺ஆன்லைன் ரம்மி நிறுவன முதலாளிகளின் நலனைப் பாதுகாக்க பாஜக தூண்டுதலில் ஆளுநர் செயல்படுகிறார் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு பூவுலகின் நண்பர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.*

பாஜக தூண்டுதலில் செயல்பட்டு வரும் ஆளுநர் மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். தமிழர்கள், தமிழ்நாட்டின் நலனுக்கெதிராகத் தொடர்ந்து செயல்படும் ஆளுநரை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.


💗💗💗💗💗💗💗

 🌺தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி கழிவறை சுவர் இடிந்ததில் 5பேர் காயமடைந்தனர்.*

எட்டயபுரத்தில் உள்ள பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 10ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் காயம்

💗💗💗💗💗💗💗

🌺சிவகங்கை: கீழடி அருங்காட்சியகத்திற்கு வரும் 14 முதல் வெள்ளி தோறும் விடுமுறை என ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிவித்துள்ளார்.*

அருங்காட்சியகத்திற்கு வெள்ளி மற்றும் தேசிய விடுமுறை நாட்களிலும் விடுமுறை என அரசு ஆணையிட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்தார்.

💗💗💗💗💗💗💗

🌺திருச்சியில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை அதிகரிக்க ரூ.600 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும்*

 இதன் மூலமாக 10,000 பேருக்கு ஐடி துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

💗💗💗💗💗💗💗

 🍁தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி ரூ.45 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.*

இராவ் சாகேப் கு.கோதண்டபாணி பிள்ளை ரூ.10 லட்சம், முனைவர் இரா. மோகன் ரூ.10 லட்சம் பரிசுத்தொகை. கோ. முத்துப் பிள்ளை-ரூ.10 லட்சம், ம.சு சம்பந்தம் -ரூ. 10 லட்சம், அம்சவேணி – ரூ.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்.

💗💗💗💗💗💗💗

🍁ஆளுநர் ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால், அதற்கு நிராகரிப்பதாக பொருள் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.*

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மாணவர்களுடன் நடத்திய கலந்துரையாடலில் ஆளுநர் பேசியுள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன.

💗💗💗💗💗💗💗

🍁ராகுல் காந்தி சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கும் மேலும் எம்பி பதவி பறிக்கப்பட்டதற்க்கும் எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் 

திண்டுக்கல் மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன் பேசுகையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராகுல் காந்திக்கு தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்ற நீதிபதி ஹெச்.வர்மாவின் நாக்கை அறுப்போம் என பேசினார்.

💗💗💗💗💗💗💗

🍁காஞ்சிபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில் 6 சிறுமிகள் தப்பி ஓடிய விவகாரத்தில், அலட்சியமாக இருந்த காப்பக உதவியாளர் தீனா தேவி, பாதுகாவலர் சுரேஷ்குமார் ஆகிய இருவர் பணியிடை நீக்கம்

💗💗💗💗💗💗💗

🍁பணம் வாங்கிக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடினார்கள் என்று உளறியுள்ளார் ஆளுநர் ரவி" - வைகோ, மதிமுக பொதுச்செயலாளர்


🍁மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் ஆளுநரைக் கண்டிக்கிறேன்"

- திமுக எம்.பி.கனிமொழி ட்வீட்

💗💗💗💗💗💗💗

🍁பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து அவதூறு பரப்பியதாக நடிகை காயத்ரி ரகுராம் மீது சென்னை சைபர் கிரைம் போலீசில் பாஜக வழக்கறிஞர் அணியினர் புகார்

அண்ணாமலை கேட்டுக்கொண்டதால் புகாரை வாபஸ் பெற்றதாக வழக்கறிஞர் அணி துணை தலைவர் ஜி.எஸ்.மணி தகவல்

💗💗💗💗💗💗💗

🍁ஆளுநரை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றும் வரை போராட வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமை”

-ஆளுநர் ரவியின் சர்ச்சை பேச்சுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம்


செய்தியாளர் பாஸ்கர்