ஒரு வரிச் செய்திகள்

 


   💢 இ வி கே எஸ் இளங்கோவுடன் நலமுடன் உள்ளார்

வதந்திகளை நம்ப வேண்டாம்- அவரது ஆதரவாளர்களால் புகைப்படம் வெளியீடு

🚀🚀🚀🚀🚀🚀🚀

💢சென்னை: நாட்டிலேயே முன்னோடி திட்டமான ஓய்வுபெற்ற காவலர் நல வாரியம் அமைக்க தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது. நல வாரியத்துக்கான விதிமுறைகள், நலத்திட்டங்கள் போன்றவற்றை இறுதி செய்ய டிஜிபி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.*

🚀🚀🚀🚀🚀🚀🚀

💢குழுவில் ஓய்வுபெற்ற துணை ஆணையர் ஆர்.சின்னராஜ், எஸ்.பி. (ஓய்வு) என்.தாமோதரன், ஏ.எஸ்.பி (ஓய்வு) முரளி, அரசு பிரதிநிதி வைதேகி, நிதி நிர்வாகி சுமதி ஆகியோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்*

🚀🚀🚀🚀🚀🚀🚀

💢பெண் காவலருக்கு கத்திக்குத்து - ஒருவர் கைது

சேலம், அயோத்தியபட்டினம் ஊர்காவல்படை பெண் காவலர் அஞ்சலிதேவியை விரட்டி கத்தியால் குத்திய மர்ம நபர்கள்

பேருந்து நிலையத்தில் காவலரை விரட்டி கத்தியால் குத்திய சதீஷ் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை

🚀🚀🚀🚀🚀🚀🚀

💢  காஞ்சிபுரம்: குருவிமலை பகுதியில் பட்டாசு குடோனில் நடந்த வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழப்பு; 

காயமடைந்தவர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், மாவட்ட ஆட்சியர், டிஐஜி ஆய்வு செய்தனர்    

🚀🚀🚀🚀🚀🚀🚀

  💢ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்;

ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில் 2வது முறையாக தாக்கல்

🚀🚀🚀🚀🚀🚀🚀

💢நெல்லை: சிப்காட் நில எடுப்பு தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ₹30 லட்சம் பறிமுதல்

தாசில்தார் சந்திரனின் வீடு மற்றும் அவரது மகள் வீட்டிலும் போலீசார் சோதனை

🚀🚀🚀🚀🚀🚀🚀

💢முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை இந்தியாவே திரும்பிப் பார்க்க கொண்டாடுவோம்

 சென்னையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

🚀🚀🚀🚀🚀🚀🚀

💢தென்காசி, ஆலங்குளம் அருகே உள்ள வடக்கு சிவகாமிபுரம் தேவாலய பாதிரியார் ஸ்டான்லி குமார் கைது

 தேவாலயத்திற்கு வரும் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சபை மக்கள் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார்

🚀🚀🚀🚀🚀🚀🚀

💢மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற உள்ள மகளிரை அவதூறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட பிரதீப் என்பவர் கும்மிடிப்பூண்டி அருகே கைது; 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை

🚀🚀🚀🚀🚀🚀🚀

💢திருப்பத்தூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை அனிதா ரயில் முன் பாய்ந்து தற்கொலை

கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனஉளைச்சல் ஏற்பட்டு இந்த விபரீத முடிவு எடுத்ததாக என போலீஸ் விசாரணையில் தகவல்

🚀🚀🚀🚀🚀🚀🚀

🎀ஆதார் எண் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்புக்கான கால அவகாசம் அடுத்தாண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பு

வரும் 31ம் தேதியுடன் கால அவகாசம் முடிய இருந்த நிலையில், மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்து சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியீடு

செய்தியாளர் மூ ராமச்சந்திரன்


🌏----உண்மை செய்திகள்----🌏