பிரதமர் மோடியை சந்தித்தது மரியாதை நிமித்தமானது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


     பிரதமர் மோடியை சந்தித்தது மரியாதை நிமித்தமானது


நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு மக்களின் மனநிலையை எடுத்துரைத்தேன்; அரசின் சட்டப்போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தேன் - டெல்லியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டிமத்திய ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சரான கிரிராஜ் சிங்கை அமைச்சர் உதயநிதி டெல்லி கிருஷி பவனில், சந்தித்துப் பேசினார். அப்போது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் மேம்பாடு, திறன் மேம்பாடு, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மேம்பாட்டு திட்டங்களுக்கான‌ கூடுதல் நிதி ஒதுக்கீடு மற்றும் மானியங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். 

டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே எஸ். விஜயன், திமுக எம்.பி கவுதம் சிகாமணி, ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் அமுதா உள்ளிட்ட அதிகாரிகள் இந்த சந்திப்பின் போது உடனிருந்தனர்.

🌏-----உண்மை செய்திகள்------🌏