அகவிலைப்படி உயர்வு முதலமைச்சர் அறிவிப்பு

 


        அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 34%ல் இருந்து 38% ஆக உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.


அகவிலைப்படி உயர்வு இன்று முதல் செயல்படுத்தி வழங்கவும் உத்தரவு; சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

ஆண்டுக்கு 2359 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் இதன் மூலம் அரசுக்கு ஏற்படுகிறது

'சமவேலை சம ஊதியம் என்ற ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக நிதித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும் இந்த குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


செய்தியாளர் கார்த்திக்