பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை:

 


    பேரவையில் விதி எண்.110ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை:


தமிழ்நாட்டை வளமான, வலிமையான மாநிலமாகவும் அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாகவும் மாற்ற பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது; திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம்.

புதிதாக சேர்ந்த மாணவர்களின் வசதிக்காக அரசுப்பள்ளிகளில் ரூ.1,050 கோடி மதிப்பில் 7,200 வகுப்பறைகள் நடப்பு ஆண்டிலேயே புதிதாக கட்டப்படும்; பாதுகாப்பான கற்றல் சூழல் உறுதி செய்யப்படும்.


உள்ளாட்சி அமைப்புகளில் பழுதடைந்த அனைத்து சாலைகளையும் மேம்படுத்த நடவடிக்கை; சிறப்பு நிதியாக ரூ.2,200கோடி வழங்கப்பட்டு 4,600 கி.மீ. நீளமுள்ள சாலைகள் நடப்பு ஆண்டிலேயே மேம்படுத்தப்படும்.

ரூ.7,388 கோடி மதிப்பில் 16,390 கி.மீ., நீளமுள்ள சாலைகள் படிப்படியாக மேம்படுத்தப்படும்.

ரூ.500 கோடி மதிப்பில் 1,000 புதிய பேருந்துகளை வாங்க அரசு முடிவு எடுத்துள்ளது.

2,013 டீசல் பேருந்துகள், 500 மின்சார பேருந்துகளை வாங்க நடவடிக்கை.

இலவச பேருந்து கட்டணம் திட்டத்தின் மூலம் மகளிருக்கு ரூ.2,000கோடி சேமிப்பாக மாறியுள்ளது.

இதனை அரசு வருவாய் இழப்பாக கருதவில்லை. மகளிருக்கான வளர்ச்சியாகத் தான் பார்க்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


செய்தியாளர் பானு