ஒரு வரிச் செய்திகள்

 


     👉ரூ.200 கோடி பணமோசடி விவகாரம்; டெல்லியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் விசாரணைக்காக நேரில் ஆஜர்

🌸🌸🌸🌸🌸

    👉அரசு மருத்துவமனைகளில் மாத்திரைகள் தட்டுப்பாடு நிலவுவது முதலமைச்சருக்கு தெரியுமா, தெரியாதா என தெரியவில்லை

செங்கலை எடுத்துக்காட்டி வாக்கு சேகரித்தனர், உதயநிதி காட்டிய செங்கலை எடுத்து வந்தாவது எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டுவாரா முதலமைச்சர்

- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

🌸🌸🌸🌸🌸

    👉குஜராத் : 200 கோடி மதிப்புள்ள 40 கிலோ ஹெராயின் கடத்தி வந்த பாகிஸ்தான் கப்பல் சிறைபிடிப்பு, 6 பேர் கைது

🌸🌸🌸🌸🌸

    👉கோவை மாவட்டம் காரமடை அருகே கண்ணார்பாளையம் என்ற கிராமத்தில்  

"தந்தை பெரியார் உணவகம்" என்ற பெயரில் உணவகம் திறக்க எதிர்ப்பு. கடை மீது இந்துத்துவ அமைப்பினர் தாக்குதல் . காரமடை போலீசார் விசாரணை

🌸🌸🌸🌸🌸

     👉தமிழகத்தில் முதல் முறையாக இலங்கை தமிழர்களுக்காக அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய மறுவாழ்வு முகாமையினை  முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

  திண்டுக்கல் அடுத்துள்ள தோட்டனுத்தில் ரூ 17 கோடியே 17 லட்சம் செலவில் கடந்த 8 மாதத்தில் 321 தனித்தனி வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

🌸🌸🌸🌸🌸

    👉ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்க 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று உஸ்பெகிஸ்தான் செல்கிறார்

🌸🌸🌸🌸🌸

    👉பழனியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கிடங்கில்  அரிசி மூட்டைகள் மாயமானதை தொடர்ந்து கிடங்கு பொறுப்பாளர் தர்மராஜ், உதவி பொறுப்பாளர் ஜெய்சங்கர், இளநிலை உதவியாளர் ரங்கசாமி உள்ளிட்ட 5 அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் திண்டுக்கல் மண்டல மேலாளர் உத்தரவு.

🌸🌸🌸🌸🌸

    👉கேரளாவையும், தமிழ்நாட்டையும் ஒப்பிட்டு பாருங்க..

இந்தியாவிலேயே மின் கட்டணம் குறைவாக நிர்ணயிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடுதான்”

- மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

🌸🌸🌸🌸🌸

     👉கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு; சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஸ்ரீமதியின் தாய் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

🌸🌸🌸🌸🌸

    👉பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.


3 நாள் பயணமாக செப்.17-ல் லண்டன் செல்லும் திரௌபதி முர்மு ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்கிறார்.

🌸🌸🌸🌸🌸

     👉பாலக்கோடு அருகே தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அழித்த அதிகாரிகள்

🌸🌸🌸🌸🌸

    👉நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்


தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பழங்குடியினர் பட்டியலில் விடுபட்டிருந்த சமூகத்தினரையும் சேர்க்க ஒப்புதல்

🌸🌸🌸🌸🌸

👉இது இந்தியாதான் 'ஹிந்தி'யா அல்ல!


தமிழ் உள்ளிட்ட மொழிகளை ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்க வேண்டும் - உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை மத்திய அரசின் அலுவல் மொழியாக்க வேண்டும் 

* மத்திய உள்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்


🌸🌸🌸🌸🌸

     👉கடந்த 2016 தேர்தலில் எஸ்.பி.வேலுமணியும், விஜயபாஸ்கரும் தாக்கல் செய்த வேட்புமனுவுக்கும், 2021 வேட்புமனுவுக்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்தால் ரெய்டு சரியா, இல்லையா என புரியும்;

சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. அந்த சொத்து விவசாயம் செய்தா வந்தது

-அமைச்சர் செந்தில் பாலாஜி

🌸🌸🌸🌸🌸


    🌷இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி, செயலாளராக ஜெய்ஷா ஆகியோர் 2வது முறையாக அப்பதவியில் மேலும் 3 ஆண்டுகளுக்கு தொடர்கின்றனர்


🌸🌸🌸🌸🌸


செய்தியாளர் பாலாஜி