💐44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நிறைவு விழா🌷🌷

 


      🙏 சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நிறைவு விழாவில், 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டியினை சிறப்பாக நடத்தியமைக்காக மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்களுக்கு சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் திரு. ஆர்க்கடி துவார்கோவிச் அவர்கள் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.


உலகில் இதுவரை நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடர்களில் தமிழ்நாட்டில்தான் சிறப்பாக நடந்துள்ளது - சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் பேச்சு💐ஓபன் பிரிவில் தங்கம் வென்ற உஸ்பெகிஸ்தான் அணிக்கு பதக்கம் வழங்கினார் முதலமைச்சர்

சென்னையை மறந்துவிட வேண்டாம், நீங்கள் மீண்டும் வரவேண்டும், 

உங்களுக்காக ஒரு சகோதரன் இங்கே இருக்கிறேன் 

- வெளிநாட்டு வீரர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி, சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர், ஆசிய பீச் வாலிபால் தொடர் ஆகியவற்றை சென்னையில் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர் மானுவேல் ஆரோனுக்கு நினைவு சின்னம் பரிசாக வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


அனைவரும் மெச்சத்தக்க வகையில் செஸ் ஒலிம்பியாட் நடந்து முடிந்துள்ளது


அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


💐செஸ் ஒலிம்பியாட் - தனி நபர் பிரிவில் தங்கம் வென்ற குகேஷுக்கு பதக்கம் வழங்கிய விஸ்வநாதன் ஆனந்த்

இந்தியாவின் செஸ் வீரராக இங்கு நிற்பதில் பெருமை அடைகிறேன்

44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் விஸ்வநாதன் ஆனந்த் பேச்சு💐செஸ் ஒலிம்பியாட் 3வது போர்டில் விளையாடிய பிரக்ஞானந்தாவுக்கு வெண்கல பதக்கம்

* 3வது போர்டில் மகளிர் பிரிவில் விளையாடிய

💐பிரக்ஞானந்தாவின் அக்கா வைஷாலிக்கு 

வெண்கல பதக்கம்


2வது போர்ட் - இந்திய வீரருக்கு தங்கம்


💐💐2வது போர்டில் ஓபன் பிரிவில் விளையாடிய இந்திய வீரர் நிகில் சரினுக்கு தங்கப் பதக்கம்


இந்திய வீரர் நிகில் சரினுக்கு, தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு பதக்கம் வழங்கி கவுரவிப்பு🌷🌷செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா : சிறந்த உடை அணிந்த அணிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ விருதுகளை வழங்கினார்


🌹செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா


செய்தியாளர் கார்த்திக்