🙏குடியரசு தலைவராக பொறுப்பேற்றார் திரவுபதி முர்மு💐

 


        🙏குடியரசு தலைவராக பொறுப்பேற்றார் திரவுபதி முர்மு💐


இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார் திரவுபதி முர்மு;  நாட்டின் 2வது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் முர்மு


அவருக்கு உச்சநீத்மன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்


குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின், நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையை ஆற்றினார் திரவுபதி முர்மு.


நான் குடியரசுத் தலைவர் பதவியை எட்டியது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழையின் சாதனை- குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.

கொரோனாவுக்கு எதிரான போரில் மக்கள் காட்டிய ஒத்துழைப்பு, துணிச்சல் மற்றும் வலிமையின் அடையாளம்.

ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் இந்தியா 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்தது.

இந்தியாவின் புகழ்பெற்ற வீராங்கனைகள் பட்டியலில் வேலு நாச்சியாரை குறிப்பிட்டு திரெளபதி முர்மு பேச்சு.


வேலு நாச்சியார், ராணி லக்ஷ்மி பாய் ஆகியோர் தேச பாதுகாப்பில் புதிய உயரங்களை அளித்துள்ளனர்.

உலகிலேயே இந்தியா தலை சிறந்த நாடாக விளங்க வேண்டும் 

குடியரசுத் தலைவராக நீங்கள் அளித்த வாய்ப்பே என் பலம்; இந்த வாய்ப்புக்காக நன்றியுடன் இருப்பேன் - திரௌபதி முர்மு


செய்தியாளர் மணிவண்ணன்