பார்வையற்றோருக்கு விருந்து படைத்த சமையல் காரர்

 


        பார்வையற்றோருக்கு விருந்து படைத்த சமையல் காரர்


சென்னை வண்ணாரப்பேட்டையில் சமையல் கலைஞர் ருக்குமாங்கதன் பார்வையற்றோருக்கு விருந்து படைத்து தனது மணிவிழாவை கொண்டாடினார்,    சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ருக்குமாங்கதன். இவர் தனது 60வது பிறந்தநாள் விழா தண்டையார் பேட்டையில் உள்ள பார்வையற்றோர் இல்லத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அறுசுவை விருந்து படைத்து கொண்டாடினார், 


40க்கும் மேற்பட்ட பார்வையற்றவர்கள்,பாடல்களை பாடி வாழ்த்து தெரிவித்தனர்., .இந்த நிகழ்வின்போது,அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பின் தலைவர் ஜெ.ஏ.கவுல்,பார்வையற்றோர் சங்க பொருளாளர் தியாகராஜன் ஆகியோருக்கும், பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.மேலும் பல்வேறு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அறுசுவை விருந்துடன், பார்வையற்றோர் நலச்சங்கம் சார்பில் தலா 10 கிலோ இலவச அரிசியும் வழங்கப்பட்டது,     இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் கலிங்கன், மாவட்ட காங்கிரஸ் ஆய்வுப்பிரிவு தலைவர் ஜானி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராயபுரம் பகுதிக்குழுவின் முன்னாள் செயலாளர் மு.ராமச்சந்திரன், உண்மைச்செய்திகள் மாத இதழ் ஆசிரியர் தர்மலிங்கம்,  உள்ளிட்டோர் கலந்துகொண்டு சமையல் கலைஞர் ருக்குமாங்கதனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்,