ஒரு வரிச் செய்திகள்

 


    🌹திருவொற்றியூர் தேரடி பகுதியில் தமிழர் தந்தை சி.பா ஆதித்தனாரின் 41 ஆவது நினைவு நாளை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வடசென்னை பத்திரிக்கையாளர்கள்*
        🌷குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறந்தார் முதல்வர் மு க ஸ்டாலின்

🌺🌺🌺🌺🌺

    👉திமுக அரசைப் பற்றி பேசினாலே ஜெயில்தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தலைநகரம் கொலை நகரமாகும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

🌺🌺🌺🌺🌺

    👉ஈரோட்டில் கடந்த 2020ம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த தாயின் இரண்டாவது கணவருக்கு 6 ஆண்டுகள் சிறை மற்றும் 2 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.    👉கேரளாவை உலுக்கிய விஸ்மயா வழக்கின் குற்றவாளியான கணவர் கிரண்குமாருக்கு 10 ஆண்டு சிறை, ரூ.12.5 லட்சம் அபராதம் விதித்து கொல்லம் கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு

🌺🌺🌺🌺🌺

    👉கோயில் திருவிழா ஆடல், பாடலில் ஆபாசம் கூடாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

🌺🌺🌺🌺🌺

    👉புதுக்கோட்டையில் தொழில் அதிபர் முகமது நிஜாமை கொலை செய்து 175 சவரன் நகை கொள்ளை அடித்த சம்பவம் 


இதுவரை 8 கொள்ளையர்கள் கைது, 120 சவரன் நகை பறிமுதல் - போலீஸ் தரப்பு தகவல் 


தலைமறைவாக உள்ள ஒரு நபரை தேடும் பணியில் தனிப்படை

🌺🌺🌺🌺🌺

    👉தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சிறப்பு - டிஜிபி

🌺🌺🌺🌺🌺

    👉கொடைக்கானலில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோடைவிழா மலர் கண்காட்சியினை கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி துவக்கி வைத்தார்.

🌺🌺🌺🌺🌺

    👉சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 

18 கொலைகள் நடந்துள்ளது; 


இது போன்ற நிகழ்வுகளால் தலைநகர் கொலைநகராக மாறி, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகி இருக்கிறது


- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

🌺🌺🌺🌺🌺

    👉சிதம்பரம் நடராஜர் கோயில் உள்ளே காவல்துறையை பயன்படுத்துவதால் தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்படுகிறது;  


அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட மத மற்றும் நிர்வாக உரிமைகளுக்கு நாங்கள் பாதுகாப்பை நாடுகிறோம்


- சிதம்பரம் தீட்சிதர்கள் பிரதமருக்கு கடிதம்

🌺🌺🌺🌺🌺

    🙏கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து


பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக கேரளாவை வலுப்படுத்தவும், தேசத்தின் ஒற்றுமையில் மாநிலங்களின் வலிமையைக் காட்டவும் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்

🌺🌺🌺🌺🌺

    👉வேலூர் மாவட்டம் காட்பாடியில் ₨75 லட்சம் மதிப்பிலான நகை கொள்ளை


அடகு கடையின் சுவரில் துளையிட்டு நகைகள் கொள்ளை 


காட்பாடி டிஎஸ்பி சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து விசாரணை

🌺🌺🌺🌺🌺

    👉தமிழகத்தில் இருந்து ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் - தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடிதம்

🌺🌺🌺🌺🌺


செய்தியாளர் கார்த்திக்