இருவரி செய்தி சுருக்கம்

 


        👉பார்த்திபன் இயக்கத்தில் ஒரே ஷாட்டில் உருவாக்கப்பட்டுள்ள ’இரவின் நிழல்’ படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர் வெளியீடு


    👉சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ₨1 லட்சம் மதிப்பிலான பரிசு கூப்பன் வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு


ஒரு மாதத்தில் அதிகமாக பயணம் செய்யும் முதல் 10 பயணிகளுக்கு தலா ₨2,000 மதிப்புள்ள பரிசு கூப்பன் - மெட்ரோ நிர்வாகம்


    🙏ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா 2 நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார் 

டெல்லி வந்த கிஷிடாவிற்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் வரவேற்பு

ஜப்பான் பிரதமராக பொறுப்பேற்று முதன்முறையாக கிஷிடா இந்தியா பயணம்


    👉தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே - தேமுதிக தலைவர் விஜயகாந்த்

பட்ஜெட்டில் மக்களுக்கான திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை

வாக்குறுதிகள், அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு குறித்து அறிவிப்பு இல்லை - விஜயகாந்த்


    👮பிரதமர் மோடியை தூக்கிலிட வேண்டும் என்று பொது மேடையில் பேசிய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பின் மாநில நிர்வாகி ஜமால் உஸ்மான் கைது தஞ்சை எஸ்.பி நடவடிக்கை


திருக்கானூர்பட்டி பகுதியில் ஜமால் உஸ்மானை போலீசார் கைது செய்தனர்


    👉திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் நல தங்கும் விடுதியில் மாணவர்களே இல்லாமல் மாணவர்கள் இருப்பதாக கணக்கு காட்டிய 2 வார்டன்கள் சஸ்பெண்ட்

ஆய்வுக்குப் பின்னர் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நடவடிக்கை.


    👉வரும் 31ம் தேதிக்குள் தமிழகத்திலுள்ள 14 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு 6 ஆயிரம் கோடி பொது நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பது உறுதி- அமைச்சர் ஐ.பெரியசாமி


    👉கைபேசி இல்லாதவர்கள் இருக்க முடியாது; கைபேசி மூலமாக சேவைகள் பெறவேண்டும் என்பதற்காக டிஜிட்டல் விவசாயத் திட்டத்திற்கு முக்கியத்துவம். 

- வேளாண் துறைச் செயலாளர் சமயமூர்த்தி


    👉தமிழ்நாடு மக்களை மாநில அரசு கடுமையான கடன் சுமையில் ஆழ்த்துகிறார்கள் - மதுரையில் பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி


    👉இது வேளாண் பட்ஜெட் அல்ல, கொள்கை விளக்க குறிப்பில் உள்ளதை வாசித்துள்ளனர். இது விவசாயிகளை ஏமாற்றும் அறிக்கை - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி


    👉46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நெல் சாகுபடி நடக்கிறது; 20,000 விவசாயிகளுக்கு ஓராண்டில் ₹5 கோடி மதிப்பில் தார்ப்பாய்கள் வழங்கப்பட்டுள்ளன - வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் தகவல்


💢50 உழவர் சந்தைகளை மேம்படுத்த ₹15 கோடியும், புதிதாக உழவர் சந்தைகள் உருவாக்க ₹10 கோடி ஒதுக்கீடு


💢சென்னை, திருச்சியில் நச்சு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்க ₹15 கோடி ஒதுக்கீடு - வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு


💢தமிழ்நாட்டில் ரூ.71 கோடியில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் அறிமுகப்படுத்தப்படும். வேளாண் சார்ந்த தொழில் தொடங்க முதற்கட்டமாக 200 இளைஞர்களுக்கு தலா ரூ.1லட்சம் கடனுதவி வழங்கப்படும்: வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்


💢தேனீ வளர்ப்பு தொகுப்புகளுக்கு ரூ.10.25 கோடி


💢உழவர் சந்தைகளின் காய்கனிகளின் வரத்தை அதிகரிக்க சிறப்புத் திட்டத்திற்கு ரூ.5 கோடி


💢₹8000 மானியத்தில் இடுபொருட்கள் தக்காளி விவசாயிகளுக்கு வழங்கப்படும்" -வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்


💢தென்னை, மா, கொய்யா, வாழை உள்ளிட்டவை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு 38,000 ஏக்கர் பரப்பளவில் ₹27.51 கோடியில் ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவித்தல் திட்டம் செயல்படுத்தப்படும்


💢விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் பனை மரக்கன்றுகள் வழங்கப்படும் - வேளாண் பட்ஜெட்


    👉சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் 5 விமானங்கள் ரத்து


புயல் எச்சரிக்கை காரணமாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் மார்ச் 22ம் தேதி வரை மூடப்படுவதாலும்,  சுற்றுலா பயணிகள் வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுப்பு


    👉சென்னை ECR சாலை பனையூரில், வேளச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானாவுக்கு சொந்தமான Orchid Resortல் அனுமதியின்றி மது விருந்து. பார்ட்டி நடத்திய மேலாளர் சைமன் கைது. மது விருந்தில் கலந்துகொண்ட 500 ஆண்கள், நடனமாடிய 50 பெண்களிடம் போலீசார் விசாரணை


நிருபர் பாஸ்கர்