இரு வரிச் செய்திகள்

 


     👉சென்னை 133 வார்டில் வெற்றி பெற்ற திமுக நிர்வாகி ஏழுமலை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்காக, 20 ரூபாய் நோட்டுகளால்  (40,000 ரூபாய்) ஆன மாலையை கொண்டு வந்தார்.


     👍உடன்பிறப்புகளின் முகத்தில் ஏற்படும் மலர்ச்சியையும் மனதில் ஏற்படும் மகிழ்ச்சியையும் காணும்போது கால் வலியும் உடல் அயர்ச்சியும் சூரியனைக் கண்ட பனிபோல் விலகுகிறது-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


188 புதிய ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர்

 

   👉காலப்போக்கில் அதிமுக திமுகவில் சங்கம்மாகிவிடும் மதுரை விமான நிலையத்தில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பேட்டி.


அதிமுக 30 - 40% இடங்கள் வரை டெபாசிட்டை இழந்துள்ளது; அதற்கு காரணம் அதிமுகவில் தலைமை இல்லை என்பதுதான்.


அதிமுகவிலுள்ள தொண்டர்கள் தாய் கழகமான திமுகவில் இணைந்து விட்டார்கள். 

காலப்போக்கில் அதிமுக, திமுகவில் சங்கமம் ஆகிவிடும்.- தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி



      👉ஜெயக்குமார் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு பொய் வழக்கு போட்டுள்ளார்; அத்துமீறலில் ஈடுபட்டால் பிடித்து கொடுப்பதற்கு விதியே உள்ளது.


நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை; சட்டப் போராட்டம் மூலம் எங்களுக்கு நியாயம் கிடைக்கும்.-அதிமுக முன்னாள் எம்.பி ஜெயவர்தன்


அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனு தள்ளுபடி

கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புழல் சிறைக்கு மாற்றம்!


  

      👤 எமர்ஜென்சி அமல்


*உக்ரேனில் அவசரநிலை பிரகடனம்*


ரஷ்யாவால்  ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தைத் தொடர்ந்து உக்ரேனில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


    👉வலிமை படம் திரையிடப்பட்ட கோவை கங்கா திரையரங்கம் முன்பு, இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றதால் பதற்றம்


ரசிகர் ஒருவருக்கு காயம்  விசாரணை நடைபெற்று வருகிறது


     👮தமிழகத்தை சேர்ந்த 22 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது - விசைப்படகுகள் பறிமுதல்


    👉உறவினர்களுக்கு இடையே ஏற்படும் நடைபாதை பிரச்சினை ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் பொது நல வழக்குகளாக தாக்கல் செய்யப்படுவது ஏற்புடையது அல்ல என்று மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


     👉மல்லையா, நீரவ் மோடி, சோக்ஸி இடமிருந்து ரூ.18000 கோடி வசூல் - மத்திய அரசு தகவல்


    👉எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (பிப்ரவரி-27) அன்று தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு


    👉50% வார்டு பெண்களுக்கு ஒதுக்கீடு  - எதிரான மனு தள்ளுபடி


👉தாவூத் இப்ராகிம் பணமோசடி வழக்கில் 


மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.


    👦ராமநாதபுரம் அருகே கீழக்கரை பகுதியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 2011ல் காஜாமுகமது என்பவர் கைது செய்யப்பட்ட வழக்கு


காஜாமுகமதுக்கு ₨1.10 லட்சம் அபராதமும், சாகும் வரை சிறை தண்டனையும் விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பு


    👉தமிழகத்திலிருந்து திருடப்பட்ட 500 ஆண்டு பழமையான சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்பு!


அடுத்த ஒரு மாதத்திற்குள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தகவல்


    🙏மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான பல திட்டங்கள் கடந்த 7 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன;


அனைத்து கிராமங்களுக்கும் கழிவறை, மின்சாரம், அனைத்து வீடுகளுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.- பிரதமர் மோடி



     👉காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு;


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினார்.


    👉தனிநபர் செல்வாக்கால் பாஜக சில இடங்களில் 2ம் இடம் வந்திருக்கலாம்;


அதை வைத்து அதிமுகவை விட பாஜக வளர்ந்துவிட்டது என சொல்வது அதிமுகவை சிறுமைப்படுத்துவது போலாகும்- விசிக தலைவர் திருமாவளவன்.



    👋சென்னையில் காலூன்றியது பாஜக 134 வது வார்டில் 5 539 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றார். அவர் மாமன்றத்தில் பாஜக சிங்கம் சிங்கிளா தான் வரும் என்று பஞ்ச் டயலாக் கூறினார் பத்திரிக்கையாளர் பேட்டியில்.


நிருபர் பாலாஜி