தமிழில் "திருமண அழைப்பிதழ்" அச்சடித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்

 


        தமிழில் அச்சடிக்கப்பட்ட  ஆஸ்திரேலிய  கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் திருமண அழைப்பிதழ்!


ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் தமிழ் பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார். அவர்களது திருமண அழைப்பிதழ் தமிழில் அச்சடிக்கப்பட்டிருக்கும் நிலையில், இணையத்தில் வைரலாகி வருகிறது.ஆல்ரவுண்டராக ஆஸ்திரேலிய அணியில் அதிரடி காட்டுபவர் க்ளவுன் மேக்ஸ்வெல். ஆர்சிபி அணிக்காக கடந்தாண்டு ஐபிஎல்லில் விளையாடிய அவரை அந்த அணி மீண்டும் தக்கவைத்துக்கொண்டுள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்ணான வினி ராமன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது திருமண அழைப்பிதழ் தமிழில் அச்சடிக்கப்பட்டுள்ளது வெளிநாட்டில் வாழ்ந்தாலும் வெளிநாட்டினரை திருமணம் செய்து  கொண்டாலும் தமிழ் பண்பாட்டை தமிழர் கலாச்சாரத்தையும் மறக்காத தமிழ் பெண்மணி இந்த செயலுக்கு அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிகின்றன.


நிருபர் பாஸ்கர்