மகள்களுக்கு சொத்தில் உரிமை சுப்ரீம் கோர்ட் உத்தரவு*

 


    *மகள்களுக்கு சொத்தில் உரிமை  சுப்ரீம் கோர்ட் உத்தரவு*


புதுடில்லி:'உயில் எழுதாமல் இறந்த தந்தையின் சுய மற்றும் பரம்பரை சொத்துக்களை பெறும் உரிமை, அவர்களின் மகள்களுக்கு உள்ளது' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்புஅளித்துள்ளது.


தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தனது சொத்தை உயில் எழுதாமல் இறந்து விட்டார். அவருக்கு ஒரு மகள் மட்டுமே உள்ளார்.இதையடுத்து தந்தையின் சொத்துக்களுக்கு அவர் உரிமை கொண்டாடினார். இதற்கு அவரது தந்தையின் சகோதரரின் மகன்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 'நாங்கள் தான் வாரிசு' என, அவர்கள் கூறினர்.


இதையடுத்து தந்தையின் சொத்துக்களுக்கு உரிமை கோரி மகள் தாக்கல் செய்த மனுவை விசாரணை நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. 


இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அந்த பெண் மேல் முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் அப்துல் நசீர், கிருஷ்ண முராரி ஆகியோர் அளித்த தீர்ப்பில் கூறியதாவது:

உயில் எழுதாமல் இறந்த தந்தையின் சுய மற்றும் பரம்பரை சொத்துக்களை பெற அவரது மகள்களுக்கே உரிமை உள்ளது.சொத்துக்கள் உரிமையில் இறந்தவரின் சகோதாரர்களை விட மகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.இந்த வழக்கில் விசாரணை மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.


வழக்கறிஞர் பிரேம்குமார்