உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.. முதல் பரிசு கார் வழங்கப்பட்டது

 


     உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.


ஆயிரம் காளைகள் மேல் போட்டியில் கலந்து கொண்டன 300 காளையர்களும் கலந்துகொண்டு போட்டியில் சிறப்பித்தனர். போட்டி மாலை 5.30 மணி வரை நடைபெற்றது.


உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 42 பேர் காயம்


மாடுபிடி வீரர்கள் - 18, பார்வையாளர்கள் - 16, காளை உரிமையாளர்கள் - 8 பேர் காயம்


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழாவில் முதலிடத்தை கருப்பாயூரணி கார்த்திக் பெற்றார் அவருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 2வது இடம் பெற்ற ராம்குமாருக்கு உதயநிதி ஸ்டாலின் சார்பில் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது


13 காளைகளை அடக்கிய கோபாலகிருஷ்ணன் 3வது பரிசு வென்றார்.

பரிசுப் பொருள்களை தமிழக அமைச்சர்கள் வழங்கினார். ஆட்சியாளர் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.


நிருபர் மணிவண்ணன்