இரு வரி செய்திகள்

 


        திமுக எம்எல்ஏ கட்சி பொறுப்பிலிருந்து விடுவிப்பு


திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் கட்சி கட்டுப்பாட்டை மீறி வருவதால், திருவொற்றியூர் மேற்குப் பகுதிக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் 


- திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்


மாநகராட்சி உதவி பொறியாளரை தாக்கியதாக எழுந்த புகாரில், எம்எல்ஏ சங்கர் மீது நடவடிக்கை!    💢அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடுக்கான கலந்தாய்வு தொடங்கியது*


 இளநிலை மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடுக்கான கலந்தாய்வு தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மட்டும் கலந்தாய்வு நடைபெறுகிறது.7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் சேர 2135 பேர் விண்ணப்பித்துள்ளனர்.


    💢தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் முறையிலேயே 1,3,5வது செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும்*


*விழுப்புரத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டி.❇️மகாராஷ்டிராவில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 12 பேரை ஓராண்டு சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து- உச்சநீதிமன்றம்.*


எம்.எல்.ஏ.க்களை காலவரம்பின்றி இடைநீக்கம் செய்வது சட்டவிரோதம் - உச்சநீதிமன்றம்.


ஒரு கூட்டத்தொடரில் இருந்து வேண்டுமானால் இடைநீக்கம் செய்யலாமே தவிர வரம்பின்றி நீக்கமுடியாது - உச்சநீதிமன்றம்


💢🔴சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க 2 டோஸ் செலுத்தியதற்கான தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை என தெற்கு ரயில்வே அறிவிப்பு. இந்த புதிய நடைமுறை பிப்.1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது


    💢திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் ரவிச்சந்திரன்  மனைவி மணிமேகலை மீதும் தன் மீதும்  பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சி போலீசார் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.


    💢தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் மதகலவரத்தை தூண்டும் வகையில் பேசுவதாக பாஜகவினர் மீது காங்கிரஸ் சார்பில் புகார்


மாநில தலைவர் அண்ணாமலை, குஷ்பு, ஹெச்.ராஜா ஆகியோர் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்


    💢சத்தியமங்கலம், பண்ணாரி - திம்மம் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்


இரவு நேரங்களில் வாகனங்களுக்கு தடை விதிப்பது குறித்து சத்தியமங்கலம் புலிகள் சரணாலய கள இயக்குனருக்கு  உயர்நீதிமன்றம் உத்தரவு


    👮உண்மை செய்திகளை திரித்து பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்றவற்றில் வெளியிடுவோர் மீது நடவடிக்கை . மதத்தின் பேரில் பகைமை வளர்த்தால் நடவடிக்கை - காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

மதத்தின் பேரில் பகைமை வளர்த்தால் நடவடிக்கை - சங்கர் ஜிவால்


    💢ராணிப்பேட்டை : பாணாவரம்  அருகே புதூரில் வீட்டின் பூட்டை உடைத்து 11 சவரன் நகை, ரூ.5,000 பணம் கொள்ளை - போலீசார் விசாரணை


    💢ரேஷன்கடைகள் மூலம் முதல்கட்டமாக சென்னை, கோவையில் சிறு தானியங்கள் விற்பனை: #தமிழகஅரசு உத்தரவு


    💢சேலத்தில் நகை, பணம் டெபாசிட் பெற்று ரூ.10 கோடி மோசடி செய்த ஜூவல்லரி அதிபர் மனைவியுடன் தலைமறைவு: நள்ளிரவில் கடையை காலி செய்துவிட்டு ஓட்டம்


    💢பொங்கல் பொருட்கள் தரத்தை உறுதிப்படுத்துவதில் மெத்தனம்; குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளர் சஸ்பெண்ட்: அமைச்சர் சக்கரபாணி அதிரடி நடவடிக்கை


    💢சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கின் நிலை என்ன?


நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


2019ல் வழக்குப்பதிவு செய்தும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என மனுதாரர் புகார்


    💢நகர்ப்புற தேர்தல் தொடர்பாக விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தை


கூட்டணி குறித்து முடிவெடுக்க 

அண்ணாமலைக்கு முழு அதிகாரம் 


தனித்து போட்டியிட இப்போதைக்கு அவசியம் ஏற்படவில்லை, கூட்டணி குறித்து அண்ணாமலை முடிவெடுப்பார் - பொன் ராதாகிருஷ்ணன்


    💢நவநீத கிருஷ்ணன் அதிமுக பொறுப்பிலிருந்து விடுவிப்பு


நிருபர் மணிவண்ணன்