செங்கல்பட்டு அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் உயிரிழப்பு

 


    செங்கல்பட்டு அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் உயிரிழப்பு


செங்கல்பட்டு கே.தேரு பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற அப்பு கார்த்திக் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளது. அவர் செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் வழக்கு ஒன்றிற்காக கையெழுத்திட்டு திரும்பிய போது, இருசக்கர வண்டியில்   3 பேர் வந்து கார்த்திக்கை பின் தொடர்ந்து அவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசினர்.  அதனால் நிலைதடுமாறிய கார்த்திகை சரமாரியாக வெட்டி தலையை உருத்தெரியாமல் சிதைத்துவிட்டு சென்றனர்.


 கார்த்திக் சம்பவ இடத்திலேயே  துடிதுடித்து உயிரிழந்த நிலையில் இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதேபோல்  காய்கறி வியாபாரம் செய்து வந்த செங்கல்பட்டு மேட்டு தெருவைச் சேர்ந்த மகேஷ் என்பவர் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது அதே கும்பல் மகேஷை வீட்டில் வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது. ஒரே இரவில்  செங்கல்பட்டில்  இரட்டைக் கொலைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் இரட்டை கொலை செய்த குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.


இந்த சூழலில் இந்த இரு கொலை சம்பவமாக  செங்கல்பட்டு நகர காவல் நிலையம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கில் பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.  


மேலும் செங்கல்பட்டு இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய மொய்தீன், தினேஷ் ஆகிய இருவர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இருவரையும் சுற்றி வளைத்துப் பிடிக்கும் போது போலீசார் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய நிலையில், தற்காப்புக்காக சுட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. உத்திரமேரூர் பகுதியில் கைதானவர்களை அழைத்து வந்த போது தப்ப முயன்றதால் இரண்டு பேர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர்.


சம்பவ இடத்தில் வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ் குமார் நேரில் ஆய்வு. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரவுடிகளை ஒடுக்க போலீசார் தீவிரம் ரவுடிகளை ஒடுக்க சிறப்பு அதிகாரியாக வெள்ளத்துரை சமீபத்தில் நியமனம்.


நிருபர் பாலாஜி 


🙏தடுப்பூசி முக கவசம் கட்டாயம்🙏