இன்றைய ராசிபலன்

 


     இன்றைய ராசிபலன் 08.12.2021 கார்த்திகை ( 22 ) புதன்கிழமை.!!


மேஷம்


மேஷம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக பேசுவீர்கள் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


ரிஷபம்


ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் இதுவரை இருந்த பிரச்னைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். மனநிறைவு கிட்டும் நாள்.


மிதுனம்


மிதுனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை புரிந்து கொள்வார்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.


கடகம்


கடகம்:  சவாலான வேலைகளையும் சாதாரணமாக ஆழமாக முடிப்பீர்கள். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


சிம்மம்


சிம்மம்: உற்சாகமாக இருப்பீர்கள். பழைய உறவினர்கள் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்குப் பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.


கன்னி


கன்னி: குடும்பத்தில் உங்கள் கைஓங்கும். உங்களை சுற்றி இருப்பவர்களை புரிந்து கொள்வீர்கள். நீண்டநாள் பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சேர்ந்து  நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.


துலாம்


துலாம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


விருச்சிகம்


விருச்சிகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப்  பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்லச் செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனையை ஏற்கப்படும். குதூகலம் அதிகரிக்கும் நாள்.


தனுசு


தனுசு: குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். வராது என்ற இருந்த பணம் கைக்கு வரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.


மகரம்


மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நிற்கும். கவனம் தேவைப்படும் நாள்.


கும்பம்


கும்பம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து செல்லுங்கள். வாகனம் தோந்தரவு தரும். உடல் அசதி சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினை வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.


மீனம்


மீனம்:  திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள்...


                          *சுபம்*

🪴🪴🪴🪴🪴🛕🪴🪴🪴🪴🪴

        

திருமதி மோகனா செல்வராஜ்

🪨🍃🪨🍃🪨🍃🪨🍃🪨🍃🪨