பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் போக்குவரத்து துறை

 


       பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் மொத்தம் 16,768 சிறப்பு பேருந்துகளை இயக்கம். அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு


ஜன.11 முதல் 13 வரை சென்னையில் இருந்து மொத்தம் 10,300 பேருந்துகள் இயக்கப்படும்


பிற ஊர்களில் இருந்து ஜன.11 முதல் 13 வரை 6,468 பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர்


சென்னையில் 5 இடங்களில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல பேருந்துகள் இயக்கப்படும்


கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், பூந்தமல்லியில் இருந்து பேருந்துகள் இயக்கம்


கோயம்பேட்டில் இருந்து 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும்


பொங்கல் முடிந்து திரும்புவோருக்காக 16,709 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – ராஜகண்ணப்பன்


பொங்கல் முடிந்து சென்னை திரும்ப ஜன.16 முதல் 18 வரை 3,797 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்


ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 1800 425 6151 என்ற எண்ணில் புகார் செய்யலாம்


கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்கள், தாம்பரத்தில் ஒரு முன்பதிவு மையம் செயல்பட ஏற்பாடு அமைச்சர் ராஜகண்ணப்பன்.


நிருபர் பாஸ்கர்