தமிழகம் முழுவதும் இன்று 15-வது மெகா தடுப்பூசி முகாம்

 


        தமிழகம் முழுவதும் 15-வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் இன்று நடைபெறுகிறது.


இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது

                    💧💧💧💧💧💧

     👮அரசு வேலை வாங்கித்தருவதாக பண மோசடி - அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார் (38), ரமணன் (34) மற்றும் கார் ஓட்டுநர் ராஜ் குமார் (47) ஆகியோர் கைது 


தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது


                    💧💧💧💧💧💧

      👮👉நெல்லை பள்ளி விபத்து தொடர்பான வழக்கில் கைதான பள்ளி தாளாளர் செல்வகுமார்,

கட்டிட ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகியோருக்கு வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவல்..


நெல்லை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு!


தலைமை ஆசிரியைக்கு விசாரணையின் போது நெஞ்சு வலி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதி.

                        💧💧💧💧💧💧

     👉திருவாரூரில் அதிமுக சார்பில் நேற்று  நடைபெற்ற ஆர்ப்பாட்டம்; கொரோனா பரவும் வகையில் கூட்டம் கூடியதாக முன்னாள் அமைச்சர் காமராஜ் உள்ளிட்ட 300 பேர் மீது வழக்குப்பதிவு.

                        💧💧💧💧💧💧

     👉அரக்கோணம்- மோசூர் ரயில் நிலையம் இடையே சென்னையில் இருந்து ரேணிகுண்டா சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து; 


சென்னை - அரக்கோணம் இடையே ரயில் போக்குவரத்து பாதிப்பு.


                         💧💧💧💧💧💧


நிருபர் பாஸ்கர்