ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்

 


        குன்னுார் ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். நீலகிரி மாவட்டம், குன்னுாரில் முப்படை தளபதி பிபின் ராவத் பயணம் மேற்கொண்ட ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது, இன்று பகல் 12.27 மணிக்கு நடைபெற்ற விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் 14 பேர் பயணம் செய்துள்ளனர், இதில் 13 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.    


பாதுகாப்பு அமைச்சகத்துடன் பிரதமர் அவசர ஆலோசனை , விபத்து குறித்து தகவல் அறிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குன்னுார் விரைந்தனர், சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அவர் குன்னுார் புறப்பட்டார். 



நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் உள்பட 14 பேர் ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றனர். ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பகுதியில் காட்டேரி என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.



    இந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


இது தொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவ மதுலிக்கா ராவத், பிரிகேடியர் எல்.எஸ்.லிட்டெர், லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங், குருசேவக் சிங், ஜிதேந்திர குமார், விவேக் குமார், சாய் தேஜா, ஹாவ் சத்பால் உட்படப் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 

                            வீடியோ பதிவு


குரூப் கேப்டன் வருன் சிங் படுகாயங்களுடன் வெல்லிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்த நிலையில் உயிர்பிழைத்த ஒரே நபர் வருன் சிங். இவர் DSSC பணிபுரிகிறார். இவருக்கு 2020 ஆம் ஆண்டு வான்வழி அவசர நிலையின் போது தனது LCA தேஜாஸ் போர் விமானத்தை காப்பாற்றியதற்காக சௌர்யா சக்ரா விருது வழங்கப்பட்டது.


நிருபர் கார்த்திக்