இரு வரி செய்திகள்

 


        🙏இரவுநேர ரோந்துப் பணியில் விழிப்புடன் செயல்பட்டு, மோட்டார் சைக்கிள் திருடர்களை ஒரு கிலோ மீட்டர் தொலைவு விரட்டிச் சென்று பிடித்த சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. மாதய்யன் அவர்களின் கடமையுணர்வுக்கும் துணிவுக்கும் தனது பாராட்டுகளை  நேரில் அழைத்து முதல்வர் வாழ்த்து கூறினார்.


👉சேலம் மாவட்டம் தாதகாப்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

                 

உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ₹5 லட்சம் நிவாரண உதவியும் அறிவிப்பு

                     👿👿👿👿👿

    💢👉கூட்டுறவுத்துறை நடத்தும் பண்ணை பசுமை கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ.85 முதல் ரூ.100 வரை குறைவான விலையில் கிடைக்கிறது; பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்- கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி


                      👿👿👿👿👿

     👊👮கரூர் : ரூ.25,000 லஞ்சம் வாங்கிய க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவேல் கைது செய்யப்பட்டுள்ளார் 


வீட்டு மனைப்பட்டவை முறைப்படுத்த லஞ்சம் பெற்றபோது குமரவேலை லஞ்சஒழிப்புப் போலீசார் கைது செய்தனர்


                     👿👿👿👿👿

    💥😢இலங்கையில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு


                     👿👿👿👿👿

     🙏👉மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் 80% மேல் நிறைவடைந்துள்ளது;


இதேபோல பெரியார் பேருந்து நிலைய பணிகளும் நிறைவடைந்தது, இன்னும் ஓரிரு வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும்- மதுரை எம்.பி சு.வெங்கடேசன்


                     👿👿👿👿👿

     🙏🙏பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கந்தர்சஷ்டி, கார்த்திகை தீபத் திருவிழா முடிந்த நிலையில் 67 நாட்களுக்குப் பிறகு உண்டியல்கள் திறக்கப்பட்டு நேற்றும், இன்றும் எண்ணப்பட்டது.  இருநாள் எண்ணிக்கையின் மொத்த தொகையாக ரொக்கம் நான்கு கோடியே 29 இலட்சத்து 27 ஆயிரத்து 965 ரூபாய் கிடைத்துள்ளது.  தங்கம் 1,914 கிராமும், வெள்ளி 19,164 கிராமும் வெளிநாட்டு கரன்சி நோட்டுக்கள் 288 ம் காணிக்கையாக கிடைத்துள்ளது.


நிருபர் மணிவண்ணன்

                         👿👿👿👿👿