கல்லூரி விடுதி காப்பாளர் அர்ச்சனாவையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

 


          திண்டுக்கல் அருகே முத்தனம்பட்டியில் செயல்பட்டு வரும் தனியாருக்குச் சொந்தமான நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் கல்வி பயிலும் மாணவிகளிடம் பாலியல் டார்ச்சர் செய்ததாக கூறி திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 


ஜோதி முருகனை தேடி வருகின்றனர். இதற்கு உடந்தையாக இருந்து செயல்பட்ட கல்லூரி விடுதி காப்பாளர் அர்ச்சனாவையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தினர்.தவறுக்கு உடந்தை, கொலை மிரட்டல், போக்சோ உள்ளிட்ட 4 வழக்குகளின் கீழ் விடுதி காப்பாளர் அர்ச்சனா கைது.சுரபி கல்லூரியை மாவட்ட நிர்வாகம் தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தது. போராட்டம் நடத்தி வரும் மாணவ, மாணவிகளிடம்  போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவிகளிடம் டிஐஜி விஜயகுமாரி பேச்சுவார்த்தை நடத்தினார். 


காவல் துறையினரின் பேச்சுவார்த்தையில்  மாணவர்கள் உடன்பாடு ஏற்பட்ட காரணத்தினால் தற்காலிகமாக மாணவியரின் போராட்டம் கைவிடப்பட்டது.


நிருபர் பாஸ்கர்