கோவை தூக்கிட்டு மாணவி தற்கொலை ஆசிரியர் போக்சோவில் கைது

 


       கோவை: தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவி; தலைமறைவாகி இருந்த ஆசிரியர் போக்சோவில் கைது


ஆசிரியரின் பாலியல் அத்துமீறலால் மாணவி தற்கொலை - கோவையில் ஆக்ரோஷ போராட்டம்.


12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை - சக மாணவர்கள் போராட்டம்


மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு, போராட்டத்தில் குதித்த மாணவர்கள்.


தனியார் பள்ளி ஆசிரியர் அளித்த பாலியல் 

தொல்லையால் மாணவி தற்கொலை - புகார்.


போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியரை கைது 

செய்த போலீசார்.


ஆசிரியருக்கு உரிய தண்டனை வழங்க 

கோரி மாணவர்கள் போராட்டம்


பள்ளி முதல்வர் மீராவை கைது செய்யக் கோரி உறவினர்களும் போராட்டம்.


    👮ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டுள்ளனர் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 


*மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்கள்


*எனது சொந்த மகளுக்கு ஏற்பட்டது போல வலியை தருகிறது.

 

   

  💢💥கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்! முதல்வர் மு.க.ஸ்டாலின்.


   😥மாணவி தற்கொலை - ராமதாஸ் வேதனை 


கோவை, தனியார் பள்ளியில் ஆசிரியர் அளித்த பாலியல் தொல்லைகளை தாங்க முடியாமல் மாணவி தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது.


தாய், தந்தைக்குப் பிறகு மாணவர்களை காக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரே இத்தகைய கீழ்த்தரமான செயலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.


பாலியல் குற்றங்களை தடுக்காமல் உடந்தையாக இருந்த பள்ளி நிர்வாகத்தில் உள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும்.


     👉கோவையில் பள்ளி மாணவி தற்கொலைக்கு காரணமான அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டி, தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிக்கை!


    👮பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை - போராட்டத்தில் ஈடுபட முயன்ற சபரிமாலா கைது


     💢💥கோவையில் ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பதற வைக்கிறது; பாலியல் தொல்லை பற்றி பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - கனிமொழி எம்.பி


நிருபர் பாலாஜி