இரு வரி செய்திகள்

 


          : சென்னை நந்தனத்தில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசை கிண்டல் செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய 3 பிரிவுகளில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.



     🙏சென்னை: சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். கிண்டி ஆளுநர் மாளிகை அருகே உள்ள வல்லபாய் படேல் சிலைக்குக்கீழ் வைக்கபட்டுள்ள படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்*



     💢💥சென்னை: தென் இந்தியாவில் முதல் முறையாக சென்னை கிண்டியில் புளூ கிராஸ் சார்பில் செல்ல பிராணிகள் மற்றும் கால்நடைகளுக்கான எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கான எரிவாயு தகன மேடையை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.

 

     💢💥சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



     💢💥டெல்லி :வலிமையான, வளர்ச்சியான இந்தியா அமைய வேண்டும் என சர்தார் வல்லபாய் படேல் விரும்பினார் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் நம் இலக்குகளை அடையலாம். இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் தேவையற்ற சட்டங்கள் அகற்றப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


     💢💥ஒகேனக்கல்: ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் இன்று முதல் பரிசலில் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. மெயினருவி, ஒகேனக்கல் ஆற்றங்கரையோரங்கள், சீனி பால்ஸ் ஆகிய இடங்களில் குளிக்க தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டு வருகிறது.



     💥💢உத்தரகாண்ட்: டேராடூன் அருகே பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இவ்விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.


😷முக கவசம் உயிர்க்கவசம்😷