ஒரு வரிச் செய்திகள்

 


      🙏பதவி அல்ல பொறுப்பு*


உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தனது மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு நடிகர் விஜய் அட்வைஸ்     👉உடல்நலக்குறைவு காரணமாக தில்லி எயிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இன்று வீடு திரும்பினார்.


     👦👉கடலூர் - நாளை பள்ளிகளுக்கு விடுமுறை*


கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – மாவட்ட ஆட்சியர்


1-8ஆம் வகுப்பு வரை நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் கடலூரில் மட்டும் விடுமுறை அறிவிப்பு


     💢💥நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு நாளாக அதிமுக அரசு அறிவித்த ஒரே காரணத்துக்காக அதை மாற்ற நினைப்பது திமுக அரசுக்கு அழகல்ல"


- பாஜக தலைவர் அண்ணாமலை


    💢💥 நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகப் பகுதி கிராமங்களில் தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. புலிகள், யானைகள் உள்பட வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில், தீ விபத்தை தடுக்க பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.        💢💥புதூர், அயப்பாக்கம் காவல் நிலையம் உதயமாகிறது*


சென்னை:- அம்பத்தூரில் இருந்து புதூர், திருமுல்லைவாயலில் இருந்து அயப்பாக்கம் காவல் நிலையம் விரைவில் உதயமாகிறது.


     💢💥விருதுநகரில் உள்ள பட்டாசு கடையில் திடீர் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி சரவெடி பட்டாசுகளை பறிமுதல் செய்தார்


பேரியம் உப்பு கலந்த சரவெடிகளை வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது


நிருபர் பாஸ்கர்