இன்றைய ராசிபலன்

 


   

      இன்றைய (08-08-2021) ராசி பலன்கள்


மேஷம்

ஆகஸ்ட் 08, 2021


உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். மனம் திறந்து பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். சுபகாரியங்களை முன்னின்று நடத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். புதுவிதமான ஆடைகளை வாங்கி மனம் மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் உண்டாகும்.அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.


பரணி : தெளிவு பிறக்கும்.


கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.ரிஷபம்

ஆகஸ்ட் 08, 2021


எழுத்து தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். சிற்றின்ப தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். எண்ணிய காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். குறுகிய தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும்.அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும்.


ரோகிணி : புத்துணர்ச்சியான நாள்.


மிருகசீரிஷம் : எண்ணங்கள் நிறைவேறும்.மிதுனம்

ஆகஸ்ட் 08, 2021


கொடுக்கல், வாங்கலில் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். பத்திரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு ஞாபக சக்திகள் மேம்படும். மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தி ஆதாயம் அடைவீர்கள்.அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்மிருகசீரிஷம் : லாபகரமான நாள்.


திருவாதிரை : தாமதங்கள் குறையும்.


புனர்பூசம் : ஆதாயம் மேம்படும்.கடகம்

ஆகஸ்ட் 08, 2021


பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். நினைவாற்றலில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த தடை, தாமதங்களை அறிந்து வெற்றி கொள்வதற்கான சூழ்நிலைகளை அமைப்பீர்கள். இளைய சகோதரர்களுக்கு லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும்.அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்புனர்பூசம் : புரிதல் மேம்படும்.


பூசம் : மந்தத்தன்மை குறையும்.


ஆயில்யம் : வெற்றி கிடைக்கும்.சிம்மம்

ஆகஸ்ட் 08, 2021


சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். இடது கண் தொடர்பான பிரச்சனைகள் குறையும். அதிகாரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு மேம்படும். மனதில் இருந்துவந்த தயக்கங்கள் குறையும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்மகம் : பொறுமை வேண்டும்.


பூரம் : பிரச்சனைகள் குறையும்.


உத்திரம் : ஒத்துழைப்பு மேம்படும்.கன்னி

ஆகஸ்ட் 08, 2021


மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். மற்றவர்களுக்கு தேவையான பணிகளை செய்து கொடுப்பீர்கள். தெய்வீகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாலின மக்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்உத்திரம் : ஆசைகள் உண்டாகும்.


அஸ்தம் : ஆர்வம் அதிகரிக்கும்.


சித்திரை : உதவிகள் கிடைக்கும்.துலாம்

ஆகஸ்ட் 08, 2021


வியாபாரம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் புதுவிதமான அனுபவம் உண்டாகும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். விவசாய பணிகளில் லாபம் உண்டாகும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் சிலருக்கு கிடைக்கும். மருத்துவம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும்.அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்சித்திரை : அனுபவம் உண்டாகும்.


சுவாதி : லாபகரமான நாள்.


விசாகம் : மேன்மை உண்டாகும்.விருச்சிகம்

ஆகஸ்ட் 08, 2021


தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். பெரியோர்களிடம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தெளிவான சிந்தனைகளின் மூலம் எண்ணிய இலக்கை அடைவீர்கள். புதிய நுட்பமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. தந்தை வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும்.அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்விசாகம் : நம்பிக்கை அதிகரிக்கும்.


அனுஷம் : விவேகம் வேண்டும்.


கேட்டை : ஆதாயமான நாள்.தனுசு

ஆகஸ்ட் 08, 2021


தொழில் தொடர்பான பணம் கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படுவது அவசியமாகும். நண்பர்களிடம் கருத்துக்களை பரிமாறும்போது கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சிலரின் அறிமுகத்தின் மூலம் தனவரவுகள் உண்டாகும். தேவையற்ற சிந்தனைகளின் மூலம் மன அமைதி குறையும்.அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்மூலம் : சிந்தித்து செயல்படவும்.


பூராடம் : கவனம் வேண்டும்.


உத்திராடம் : மன அமைதி குறையும்.மகரம்

ஆகஸ்ட் 08, 2021


சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் உண்டாகும். குழப்பமான சிந்தனைகளின் மூலம் இலக்கிலிருந்து விலகி செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சைஉத்திராடம் : முன்னேற்றமான நாள்.


திருவோணம் : நெருக்கம் அதிகரிக்கும்.


அவிட்டம் : விவாதங்கள் நீங்கும்.கும்பம்

ஆகஸ்ட் 08, 2021


உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். சகோதரர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்புஅவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


சதயம் : மாற்றமான நாள்.


பூரட்டாதி : இழுபறிகள் குறையும்.மீனம்

ஆகஸ்ட் 08, 2021


குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். மனைவி வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். தனவரவுகளை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும்.அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்பூரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.


உத்திரட்டாதி : கலகலப்பான நாள்.


ரேவதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.


                         *சுபம்*


  திருமதி மோகனா செல்வராஜ்


🙏முக கவசம் உயிர்க்கவசம்🙏