ஒரு வரி செய்தி துளிகள்

 


     ஒரு வரி செய்திகள் !! 


👉 5 மொழி பெயர்ப்பு நு}ல், 5 செம்மொழிச் செய்தி மடல், 5 ஒலி-ஒளிப் படங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 


👉 மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு பேரவையில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தினை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என விவசாய தமிழர் விழிப்புணர்வு நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


👉 ஆதிதிராவிட மாணவ, மாணவியர் மற்றும் பணிபுரியும் மகளிருக்காக ரூ.10.04 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டிடங்களைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.


👉 கோவை விஜயா பதிப்பகத்தின் விஜயா வாசகர் வட்டத்தின் 2021ம் ஆண்டுக்கான பிரபல கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பெயரில் வழங்கப்படும் விருது, பிரபல எழுத்தாளர் கோணங்கிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


👉 மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 576.94 புள்ளிகள் உயர்ந்து 56,701.66 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.


👉 டெல்லியில் அனைத்து பள்ளி மற்றும் கல்லு}ரிகளில் தனிமைப்படுத்தும் மையங்களை திறக்க அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.


👉 பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு ரூ.3 கோடி பரிசு வழங்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.


👉 நீர், ஆகாயம், தரை என அனைத்து வழிகளிலும் கண்காணிப்பு தீவிரமாக உள்ளது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


👉 உத்தராகண்ட் மாநிலம் பிதோராகர் அருகே ஜும்மாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.


👉 தமிழகத்தில் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 4ம் தேதி, தரவரிசை பட்டியல் வெளியாக உள்ளது.


👉 ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற நினைப்பவர்களைத் தடுக்க மாட்டோம் என்று தாலிபான்கள் அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட 90 நாடுகள் விடுத்த கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


👉 ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து ஆர்சிபி அணி வீரர் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார்.


👉 கர்நாடகம் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை எதிர்த்து புதுவை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


👉 இந்திய அணி ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


👉 மருத்துவ உபகாரணங்களுக்கான சுங்க வரி விலக்கை செப்டம்பர் 30 வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. 


👉 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் படகு இல்லங்களில் பலத்த காற்றால் மிதி படகுகளை இயக்க பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


திருமதி மோகனா செல்வராஜ்