😡 கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் குறித்த விவரங்களை முழுமையாக இணையதளங்களில் பதிவேற்றம் செய்யும் வரை, அவற்றை குத்தகைக்கு விட தடை விதிக்க கோரிய வழக்கில் இந்து சமய அறநிலைய துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
*************
😡ஆகஸ்ட் 6 - ஹிரோஷிமா நினைவு தினம்
1945 ஆகஸ்ட் 6 ம் தேதி ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது உலகின் முதல் அணுகுண்டை வீசியது அமெரிக்கா. இதில் 1.40 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
*************
😡 மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் இன்று முதல் 3 நாட்கள் பக்தர்கள் அனுமதி ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் நலன் கருதி ஆடி வெள்ளி, அமாவாசை ஆகிய நாட்களில் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
*************
😡 கும்பகோணம்: ரூ.600 கோடி நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான ஹெலிகாப்டர் சகோதரர்கள் கும்பகோணம் சிறையில் அடைக்கப்பட்டனர். புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்ட எம்.ஆர் சாமிநாதன், எம்.ஆர் கணேஷ் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். கும்பகோணம் நீதிமன்ற நீதிபதி தரணிதர் ஆகஸ்ட் 19 வரை நீதிமன்ற காவல் அளித்ததையடுத்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
*************
😡ரூ.10,603 கோடிக்கான விண்ணப்பங்கள் தேக்கம் கொரோனாவால் இறந்தவர்களுக்கு இன்சூரன்ஸ் தராமல் இழுத்தடிப்பு: கிடப்பில் போட்டுள்ள நிறுவனங்கள்; கடனில் தத்தளிக்கும் குடும்பங்கள்
*************
😡வங்கிக் காசோலை விதிகளில் திருத்தம் அமலுக்கு வந்தது..! காசோலை கொடுத்தால் விடுமுறை நாட்களிலும் கிளியரிங்
*************
😡உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் அர்ச்சனை தொடக்கம்; சமஸ்கிருதத்தில் மட்டும் அர்ச்சனை செய்யப்பட்டு வந்த நிலையில் தமிழில் மந்திரங்கள் முழுங்குவதால் மக்கள் மகிழ்ச்சி!
*************
😡தஞ்சையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசார் வழக்குப்பதிவு
*************
😡ரூ.1,100 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலை 2023 ஆம் ஆண்டில் திறக்க முடிவு
*************
😡மணப்பாறை அருகே 100 ஆண்டுகள் பழமையான
3 கோவில்களில் கலசங்கள் திருட்டு; இரிடியத்திற்காக திருடப்பட்டதா? என போலீசார் விசாரணை
*************
நிருபர் கார்த்திகேயன்