தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2.63 லட்சம், கடன் சுமை வெள்ளை அறிக்கை வெளியீடு நிதியமைச்சர்

 


        கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியீடு


120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல் அடிப்படையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள வெள்ளை அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு...


2011 ஆம் அதிமுக ஆட்சிக்கு வந்த போது தமிழ்நாடு அரசின் கடன் சுமை ரூ.1.14 லட்சம் கோடியாக இருந்தது. 2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் ரூ.2.28 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு அதிமுக அரசன் 10 ஆண்டு முடிவில் தமிழ்நாட்டின் கடன் ரூ.4.85 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது.


தமிழக அரசின் ஒட்டுமொத்த கடன் சுமை 5 லட்சத்து 24,574 கோடியாக உள்ளது


தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் சுமை உள்ளது.


 2020-21ம் நிதி ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாகுறை 61 ஆயிரத்து 320 கோடி : நிதி அமைச்சர்


கடனில் தமிழ்நாடு.. ஊதியத்தை கொடுக்கவே கடன்"


குற்றச்சாட்டுகளை அடுக்கி வெளியான வெள்ளை அறிக்கை


வெள்ளை அறிக்கை இதுவரை!


1977ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டப்பேரவையில் 9 வெள்ளை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 


கடந்த 1977ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.


1998ம் ஆண்டு கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு தொடர்பாகவும், 2000ம் ஆண்டில் எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி. பிரிவினர்களுக்கு அரசு பணிகளில் வழங்கிய இட ஒதுக்கீடு தொடர்பாகவும் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.


கடைசியாக சட்டப்பேரவையில் 2001ம் ஆண்டு தமிழ்நாட்டின் நிதிநிலை தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்த வெள்ளை அறிக்கை தொடர்பாக எந்த விவாதமும் நடைபெற வில்லை.


வெள்ளை அறிக்கையில் ஏற்படும் தவறுகளுக்கு நான்தான் பொறுப்பு 


ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் அறிக்கையை ஆய்வு செய்த பின்பு அறிக்கை தயார் செய்யப்பட்டது 


 தமிழக அரசு வெளிப்படைத்தன்மை உடன் செயல்படுவதால் வெள்ளை அறிக்கை வெளியிடுகிறோம் - நிதியமைச்சர்.


15 ஆண்டுகளாக மோட்டார் வாகன வரியை உயர்த்தாமல் இருப்பது நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது”  


அரசிற்கு வர வேண்டிய பணம் யார் கைக்கு சென்றது?

அரசாங்கத்தின் கைக்கு வராத பணம் பணக்காரர்களின் கையில் சேர்கிறது


உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் 2577 கோடி ரூபாய் இழப்பு :

            வட்டி....

தமிழ்நாடு அரசு ஒரு நாள் வட்டியாக 87.31 கோடி ரூபாயை செலுத்துகிறது


அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.


நிருபர் கார்த்திக்