இரு வரி செய்திகள்

 


        அம்பாசமுத்திரம் பூட்டிய வீட்டில் மகளிர் காங்கிரஸ்  அணி பொறுப்பாளர் சுதா (52)மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.மேற்குத்தொடர்ச்சி மலையை சீர்குலைக்கும் ஒன்றிய அரசின் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும் - நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.சார்ஜாவில் இருந்து உடையில் மறைத்து விமானத்தில் கடத்தி வந்த 7.9 கிலோ தங்கம் கோவையில் பறிமுதல் 


* பேஸ்ட் வடிவில் தங்கத்தை கடத்தி வந்த 6 பேரிடம் வருவாய் புலனாய்வு பிரிவினர் விசாரணைஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் மூன்று மாதங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும்படி ஏன் உத்தரவிடக் கூடாது? - உயர்நீதிமன்றம் கேள்வி


தஞ்சை, கள்ளக்குறிச்சி, கடலூர் போன்ற மாவட்டங்களில் தொற்று சிறிது அதிகரிப்பு


* தொற்று சிறிது அதிகரித்து வரும் நிலையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை


* தொற்று குறைந்து வந்தாலும் பரிசோதனை எண்ணிக்கையை அரசு குறைக்கவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்திண்டுக்கல்லில் போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது


திண்டுக்கல் நகரை சேர்ந்த 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கி நல்லாம்பட்டியை சேர்ந்த டிரைவர் சீனிவாசன்(21) என்பவரை திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர்.


🙏முக கவசம் உயிர்க்கவசம்🙏