இந்த மாநிலத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி

 


           கொரோனா முதல் அலையை தொடர்ந்து 2ஆவது அலை தாக்கம் கடுமையாக இருந்ததது.


தற்போது நோய் பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருவதால் மாநிலங்களும் ஊரடங்கு அமலில் இருந்து பல்வேறு தளர்வுகளை அளித்து வருகின்றன. தமிழகத்தை பொறுத்துவரை பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், பார்கள் திறக்கப்படவில்லை.


இந்நிலையில் டெல்லியில் நாளை முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


50% இருக்கைகளுடன் டெல்லியில் திரையரங்குகள் நாளை முதல் இயங்கும். மேலும் மெட்ரோ ரயில், பேருந்துகள் 100% இருக்கைகளுடன் இயங்கவும் டெல்லி அரசு அனுமதி அளித்திருக்கிறது.