கரூர் வைஸ்யா வங்கி சார்பில் வழங்கப்பட்ட 10 ஆம்புலன்ஸ்களின் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
10 அவசர கால ஆம்புலன்ஸ் சேவையை, முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக கரூர் வைஸ்யா வங்கி ஒரு கோடியே 77 லட்சம் மதிப்பிலான 10 அவசர கால ஊர்திகளை தமிழக அரசுக்கு வழங்கி உள்ளது. இவற்றை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாநிலம் முழுவதும்
*ஒருங்கிணைந்த மின் பராமரிப்பு பணிகள்"*
*நாளை முதல் அடுத்த பத்து நாட்களுக்கு நடைபெறும். ஆகவே, மின்சார பராமரிப்பு பணிகள் நடைப்பெறும் பகுதிகளில்* *நாளொன்றுக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரையில் அறிவிக்கப்பட்ட மின்தடை அமலில் இருக்கும். போர்கால அடிப்படையில் சீரழிந்த மின் நிலையங்கள், மின்கம்பிகள், உட்பட்ட பல சீரமைப்பு பணிகள் விரைவாக நடக்கும்...*
- *வி.செந்தில் பாலாஜி,*
*மின்சாரம், கலால் மற்றும் மதுவிலக்கு (ம)* *ஆயதீர்வை அமைச்சர்*
*தமிழ்நாடு அரசு.*
😡*தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு..*
*கொரனா குறைந்த மாவட்டத்தில்* *மாவட்டத்திற்குள் பேருந்தை இயக்கவும்*
*உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ண வாய்ப்பு*
இனி பேருந்துகளில் இந்த மாதிரி டிக்கெட்
நகரப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கும், அவர்களது பாதுகாவலர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பயணச்சீட்டின் மாதிரி
மா - மாற்று திறனாளிகள்,
மா.உ - மாற்று திறனாளி உதவியாளர்,
மூ.பா - மூன்றாம் பாலினர்
மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள்
ஆபத்தானவை
- நடிகர் சூர்யா
************
👤👥சிவகங்கையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நிலம் மீட்பு
ஆக்கிரமிக்கப்பட்ட இடத்திற்கு அறநிலையத்துறை சீல் வைப்பு
கௌரி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் உறவினர் அபகரித்ததாக புகார்
***************
😡👤தமிழ்நாடு டூரிசம் கட்டுப்பாட்டில் செயல்படும் உணவகங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்
- சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்
***********
👮ஆபாச யுடியூபர் மதனை ஜூலை 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
*************
👮👊தூத்துக்குடி மாவட்டம் ஆத்திகுளம் கிராமத்தை சேர்ந்த காளீஸ்வரன் என்பவர் போக்சோ சட்டத்தில் கைது - அப்பகுதியில் உள்ள சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என்று புகார்
******************
👤👥தியாகராயர் நகர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யா மீதான வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்க உத்தரவு!*
தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி
செய்ததாக சத்யா மீது புகார்!*
***************
⚪
😡👮அனைத்து கனரக வாகனங்களுக்கான தகுதி சான்றுகள், ஆவணங்களை புதுப்பிக்க செப்.30 வரை அவகாசம் நீட்டிப்பு.*
*வாகன உரிமம், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் புதுப்பிக்க மத்திய அரசு அவகாசம்.*
****************
🙏*தமிழகத்தில் கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வந்த பிறகு கோயில்கள் திறக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு*
*******************
👤👥தப்புக்கணக்கு போட வேண்டாம் : தி.மு.க.,வுக்கு அ.தி.மு.க., எச்சரிக்கை*
*அ.தி.மு.க.,வினரைஅச்சுறுத்துவதால், அ.தி.மு.க., அடங்கிப் போகும் என, தப்புக்கணக்கு போடாமல், நல்லாட்சி நடத்துவதில் கருத்தை செலுத்துவதில் தி.மு.க., கவனம் செலுத்த வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் தெரிவித்து 'உள்ளனர்.*
***************
🙏முக கவசம் உயிர் கவசம்🙏
நிருபர் .கார்த்திக்