இரு வரி செய்திகள்

 


          ரேசன் கடைகளில் (15-06-21) முதல் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் ரூ.2000 விநியோகம்  -உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி
 தமிழகத்தில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக நியமிக்க பரிசீலிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு தமிழக பாஜக தலைவர் எல் முருகன் வரவேற்பு தெரிவித்துள்ளார். கோயிலின் ஆகம விதிகளை தெரிந்தவர்களே அங்கு அர்ச்சகராக தமிழ்நாடு அரசு நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.பணிநிரந்தரம் செய்வதாகக் கூறி அதிமுக ஆட்சியில் 200 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களிடம் ரூ.4 கோடி வசூல்; இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு! அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் -தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை

பள்ளிகளில் பல்வேறு பணிகள் நடைபெற இருப்பதால், ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதற்கு கல்வித்துறை ஆணையர் உத்தரவு10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்ணுக்கு பதில் மாணவர் ஆல் பாஸ் என்று மட்டுமே இருக்கும்

- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிஅதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கி ஓ.பி.எஸ். - இ.பி.எஸ் கூட்டாக அறிவிப்பு


அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமகவை விமர்சித்து புகழேந்தி நேற்று பேட்டியளித்த நிலையில், இன்று கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை

சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என அதிமுக கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றம்தனது பெயரில் போலியாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகள் தொடங்கி, முதலமைச்சரை டேக் செய்து தான் சொல்லாத கருத்துக்கள் பதிவிடப்படுகின்றன - நடிகர் செந்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்


                       ****************


👤நீட் தேர்வு விவகாரம் தொடர்பான ஆலோசனைக்கு பிறகு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் பேட்டி


* நீட் தேர்வால் தமிழ்வழி கல்வி பயின்றோருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த தரவுகள் திரட்டப்படுகிறது - ஏ.கே.ராஜன்


* வரும் திங்கட்கிழமை மீண்டும் ஆலோசனை நடத்தப்படும் - ஏ.கே.ராஜன்


                      ****************


👤👮சென்னை அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் இருந்து வெளியேறும் மாணவர்கள்


*பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் எழுந்த நிலையில் மாணவ, மாணவியர் அதிருப்தி             🙏முக கவசம் உயிர் கவசம்🙏