பொறியியல் கல்லூரிகளில் தமிழிலே பாடங்கள் நடத்த அனுமதி

 


       கொரோனா 2வதுஅலை காரணமாக இந்தியா முழுவதும் பாடங்கள் அனைத்து ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன.  மேலும் பொறியியல் பாடங்களை ஆங்கிலம் தவிர்த்து பிராந்திய மொழிகளில் படிப்பதற்கான உயர்மட்ட ஆலோசனைகுழு கூட்டம் நடத்தப்பட்டு வந்தது.  அதன்பின் பொறியியல் பாடங்களை தமிழ் உட்பட 7 பிராந்திய மொழிகளில் கற்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.


பொறியியல் கல்லூரிகளில் பாடங்கள்  தற்சமயம் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன. ஆங்கிலத்தில் மட்டுமே இதுவரை இடம் பெற்றிருந்த பாடங்களை இனி அவரவர் தாய்மொழியிலேயே கற்றுக் கொள்ளலாம். தமிழ், இந்தி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, கன்னடம் ஆகிய மொழிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த உத்தரவு வரும் கல்வியாண்டிலேயே கடைப்பிடிக்கப்படும் எனவும், வரும் கல்வியாண்டிலேயே பொறியியல் பாடங்களை தமிழ் மொழியில் கற்கவும், கற்பிக்கவும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.