இரு வரி செய்திகள்

 

 


     

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி*


தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் சென்னை மியாட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக அதிகாலை 3 மணி அளவில் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மார்ச்சுவரி பணிக்கு இரண்டு பேர்  மட்டுமே உள்ளனர்.* அதனால் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்வதற்கு காலதாமதம்


 செவிலியர் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் அவதி* 


 இறந்தவர்களின் உடலை மூடுவதற்கு கோவிட் பெட்ஷீட் பற்றாக்குறை* 


 மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.*இன்று (19.5.21) முதல் முன்களபணியாளர்கள், பத்திரிகை, ஊடகத்துறையினர் மற்றும் வழக்குறைஞர்கள் பணி நிமித்தமாக வெளியே செல்ல இ-பதிவு தேவையில்லை. அடையாள அட்டை வைத்திருந்தால் போதும்.

-சென்னை போலீஸ் கமிஷனர் அறிவிப்பு*சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு அதிகாரிகள் தவறு செய்தால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தலைமை செயலர் இறையன்பு எச்சரித்துள்ளார்.*


கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்க உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு உத்தரவு.முதலமைச்சர் கொரோனா நிதிக்கு அதிமுக ரூ.1 கோடி நிதி!: தலைமை செயலாளரிடம் நேரில் வழங்கினார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இழந்த தொழிலாளர்களுக்கு தினமும் உணவு வழங்கப்படுகிறது.-டில்லி