சென்னை மாநகராட்சியின் தலைமை கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு அமைச்சர் பி.கே.சேகர்பாபு

 


       சென்னை மாநகராட்சியின் தலைமையிடத்தில் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறையிலிருந்து.

மாநகராட்சிக்கு உட்பட்ட மயானங்கள் நேரடியாக வீடியோ மூலம் கண்காணிக்கப்பட்டு வரும் பணிகளை. இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


    😡சென்னை மாநகராட்சி அறிவிப்பு😡


கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தவரின் உடலை புதைப்பது மற்றும் தகனம் செய்வது போன்ற நிகழ்ச்சியில் குறைபாடுகள் இருந்தால், அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் மாநகராட்சிக்கு தெரியப்படுத்தலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்து இருக்கிறது.


சென்னை நகரின் மருத்துவமனையில் உள்ள அமரர் ஊர்தியில் இறந்தவரின் உடலை மயானத்தில் அடக்கம் செய்ய அல்லது தகனம் செய்ய பணம் கேட்டால் புகார் அளிக்கலாம்.


மாயனங்களின் சேவையில் குறைபாடுகள் இறந்தால் சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு 044 - 25384520 அல்லது வாட்சப் நம்பர் 9498346900 ஆகிய நம்பரில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.


இலவச அமரர் ஊர்தியை பெற 155377 என்ற நம்பருக்கு தொடர்பு கொண்டு அமரர் ஊர்தி சேவையை பெறலாம். கொரோனா உயிரிழப்பு சடலத்தை தகனம் செய்வதில் குறைபாடுகள் இருந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.